கொரோனா: ஆம்புலன்ஸிலிருந்து வெளியே விழுந்த சடலம்!

Published:

dead body
dead body

இந்தியாவில் கொரோனா வைரஸின் 2வது அலை ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. நாளொன்றுக்கு 3 லட்சத்து 32 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும், 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் செத்து மடிந்து வருகின்றனர்.

நாள்தோறும் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்படுவதால், மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க போதிய இடமில்லாமல் பல்வேறு மாநிலங்கள் விழி பிதுங்கி நிற்கின்றன. மேலும், ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கொத்து கொத்தாக மடியும் அவலம் ஏற்பட்டு வருகிறது.

உயிர்பிழைக்க தேவையான ஆக்சிஜன்தான் பற்றாக்குறையா..? என்று பார்த்தால், உயிரிழந்தவர்களை தகனம் செய்யவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குஜராத், உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் எரியூட்டுவதற்காக சடலங்கள் வரிசை கட்டி வைக்கப்பட்டிருப்பது நாம் கண்கூட பார்த்து வருகிறோம்.

கொரோனாவால் இப்படிப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், நாள்தோறும் மனதை உலுக்கும் விதமாக ஏதேனும் விஷயங்கள் அரங்கேறிக் கொண்டே தான் இருக்கிறது.

அந்த வகையில், மத்திய பிரதேசம் மாநிலம் விடிசா பகுதியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை, மருத்துவமனை நிர்வாகமே தகனம் செய்து வருகிறது.

ALSO READ:  திருவனந்தபுரம் - சென்னை சிறப்பு ரயில் மேலும் நீட்டிப்பு! மேலும் ரயில்கள் நீட்டிப்பு விவரம்!

இதற்காக, மருத்துவமனையில் இருந்து இறந்த உடல்களை ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் எரியூட்டு மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அப்படி, இன்று காலை வழக்கம் போல, சடலங்களை ஏற்றிக் கொண்டு ஆம்புலன்ஸ் மருத்துவமனை வளாகத்தை விட்டு வெளியே வந்தது.

அப்போது, திடீரென ஆம்புலன்ஸின் பக்கவாட்டு கதவு திடீரென திறந்த நிலையில், சடலம் ஒன்று சாலையில் கீழே விழுந்தது. இது ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கும், அங்கிருந்த பொதுமக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

Related articles

Recent articles

spot_img