அனைவருக்கும் தரிசனம்: திருப்பதி தேவஸ்தானம்!

இந்தியா சற்றுமுன்
thirupathi 2
thirupathi 2

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அனைத்து மாநில பக்தர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளூர் பக்தர்களை தவிர மற்ற மாநில பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தேவஸ்தான நிர்வாகம் தடை விதித்திருந்தது.

இந்நிலையில் தரிசனம் செய்வது குறித்து தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை முதல் அனைத்து மாநில பக்தர்களும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். இன்று முதல் இரவு 11.30 மணி வரை இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறது.

இலவச தரிசனத்திற்காக நாள்தோறும் வழங்கப்பட்டு வந்த 2 ஆயிரம் டிக்கெட்டில் இருந்து 8 ஆயிரம் டிக்கெட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.