பெண்ணுடன் கொண்ட உறவு! பெட்ரோல் ஊற்றி எரித்த நண்பர்கள்!

Published:

fire
fire

கள்ள உறவில் ஈடுபட்ட ஒருவரை அவரின் நண்பர்கள் சேர்ந்து தீ வைத்து கொளுத்திய சம்பவம் நடந்துள்ளது .

ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள நெலத்துரு கிராமத்தில் அங்கம்மா ராவ் என்ற திருமணமாகாத 28 வயதான இளைஞர் வசித்து வந்தார். அவர் அதே கிராமத்தில் வசிக்கும் ஒரு இளம் பெண்ணுடன் கள்ள உறவு கொண்டிருந்தார்.

அவரின் இந்த உறவால் அவரின் நண்பர்கள் கடுப்பானார்கள். அதனால் அவரது சில நண்பர்கள் அந்தப் பெண்ணுடனான அவரது உறவு குறித்து அடிக்கடி எச்ச்ரித்தும் அந்த உறவை விட்டு விடும்படியும் கூறி வந்தனர் .

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, அங்கம்மா ராவ் தனது நண்பர்களுடன் குடித்துக்கொண்டிருந்தார்., அப்போது அவர்களுக்குள் இந்த கள்ள உறவு விவகாரம் சம்பந்தமாக மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது .

பின்னர் அங்கம்மா ராவ் மது போதை அதிகமாகி நிதானமிழந்த போது, ​​அவர்கள் அவரை பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொளுத்தினர். அப்போது அவர் உடல் தீப்பிடித்து எரிந்ததால், அவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரை தீக்காயங்களுடன் அங்குள்ள ஹாஸ்ப்பிட்டலில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

அங்கு 80% தீக்காயங்களுடன் உயிருக்கு அவர் போராடி வருகிறார் .பின்னர் போலீசுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் விரைந்து வந்து அந்த அங்கம்மா ராவை தீவைத்து கொளுத்திய அவரின் நண்பர்கள் அனைவரையும் கைது செய்து அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது .

Related articles

Recent articles

spot_img