நான் உலகின் மிகப் பழைமையான தமிழ் மொழியின் ரசிகன்: பிரதமர் மோதி!

manadhinkural 1 - 2026

நான் தமிழ்க் கலாசாரத்தின் மிகப் பெரும் ரசிகன்

மனதின் குரல், 78ஆவது பகுதி
ஒலிபரப்பு நாள்:  27.06.2021
ஒலிபரப்பு: அகில இந்திய வானொலி, சென்னை
தமிழாக்கம் / குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன்

பிரதமர் நரேந்திர மோதி தமது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மனதின் குரல் மூலம் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் இருந்து ஒரு பகுதி…

என் கனிவான நாட்டுமக்களே, என்னை விட உங்கள் அனைவரின் பங்களிப்பும் அதிகமாக இருப்பது தான் மனதின் குரலின் மிகப்பெரிய சிறப்பம்சமே.  

தற்போது தான் MyGov தளத்தில் நான் ஒரு பதிவைப் பார்த்தேன்.  இதை சென்னையைச் சேர்ந்த திரு. ஆர். குருபிரஸாத் அவர்கள் பதிவு செய்திருக்கிறார்.  அவர் எழுதியிருப்பது உங்களுக்கும்  மிகவும் பிடிக்கும்.  தான் மனதின் குரலைத் தவறாது கேட்டு வருவதாக எழுதியிருக்கிறார்.  குருபிரஸாத் அவர்களின் பதிவிலிருந்து இப்போது நான் சில வரிகளை மேற்கோள் காட்ட விரும்புகிறேன். 

ALSO READ:  கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

நீங்கள் தமிழ்நாடு பற்றிப் பேசும் போதெல்லாம், என்னுடைய ஆர்வம் மேலும் அதிகரிக்கிறது.  நீங்கள் தமிழ் மொழி பற்றியும், தமிழ் கலாச்சாரத்தின் மகத்துவம் குறித்தும், தமிழ்ப் பண்டிகைகள் மற்றும் தமிழ்நாட்டின் முக்கியமான இடங்கள் பற்றியும் பேசியிருக்கிறீர்கள்.  மனதின் குரலில் நீங்கள் தமிழ்நாட்டு மக்களின் சாதனைகளைப் பற்றி பல முறை கூறியிருக்கிறீர்கள். 

திருக்குறள் மீது உங்களுக்கு இருக்கும் பிரியமும், திருவள்ளுவர் பால் உங்களிடம் இருக்கும் மரியாதையும் விவரிக்க அப்பாற்பட்டவை.  ஆகையால் மனதின் குரலில் நீங்கள் தமிழ்நாடு குறித்து என்னவெல்லாம் கூறியிருக்கிறீர்களோ, இவை அனைத்தையும் ஒன்று திரட்டி நான் மின் புத்தகம் ஒன்றைத் தயார் செய்திருக்கிறேன்.  நீங்கள் இந்த மின் புத்தகம் குறித்துப் பேசி, இதை NamoAppஇல் வெளியிட முடியுமா?  நன்றி.

குருபிரஸாத் அவர்களின் கடிதத்தை நான் உங்களிடத்தில் வாசித்து விட்டேன்.  குருபிரஸாத் அவர்களே, உங்களுடைய இந்தப் பதிவைப் படிக்க எனக்கு மிகவும் ஆனந்தமாக இருக்கிறது.  இப்போது நீங்கள் உங்களின் மின் புத்தகத்தில் மேலும் ஒரு பக்கத்தையும் இணைத்துக் கொள்ளுங்கள்.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

நான் தமிழ்க் கலாச்சாரத்தின் பெரிய அபிமானி.  நான் உலகத்திலேயே பழமையான தமிழ் மொழியின் பெரிய அபிமானி. 

தமிழ் மொழியின் பால் என்னுடைய அன்பு என்றுமே குறைவு காணாது. 

 நண்பர்களே, ஒவ்வொரு இந்தியரும், உலகின் மிகப் பழமையான மொழி நம் தேசத்தினுடையது, இதனை நாம் போற்றிக் கொண்டாட வேண்டும், பெருமிதம் கொள்ள வேண்டும்.   தமிழ் மொழி குறித்து எனக்கும் மிகவும் பெருமிதம் பொங்குகிறது. 

குரு பிரஸாத் அவர்களே, உங்களுடைய இந்த முயற்சி எனக்குப் புதிய கண்ணோட்டத்தை அளிக்க வல்லது.  ஏனென்றால், மிகவும் எளிய இயல்பான வகையிலே தான் நான் மனதின் குரலில் வெளிப்படுத்தி வந்திருக்கிறேன்.  இதில் இப்படிப்பட்ட ஒரு கூறும் இருக்கிறது என்பதை நான் அறிந்திருக்கவில்லை. 

நீங்கள் பழைய விஷயங்கள் அனைத்தையும் திரட்டியிருப்பதை நான் ஒருமுறை அல்ல, இரு முறைகள் படித்துப் பார்த்தேன்.  குருபிரஸாத் அவர்களே, இந்தப் புத்தகத்தை நான் கண்டிப்பாக Namo செயலியில் தரவேற்றம் செய்வேன்.  உங்களின் வருங்கால முயற்சிகளுக்காக பலப்பல நல்வாழ்த்துக்கள்.

ALSO READ:  ஐபிஎல் 2026: இதுவரை... புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories