முககவசம் அணியாமல் பெண் காவலரிடம் வாக்குவாதம் செய்த பெண்!

இந்தியா சற்றுமுன்
karaikal - 2026

காரைக்காலில் முகக்கவசம் அணியாமல் சென்ற பெண் ஒருவர் அபராதம் விதிக்க முயன்ற காவலரிடம் அநாகரீகமாக பேசி வாக்குவாதம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகே வாகனத்தணிக்கையில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவ்வழியாக இருசக்கரவாகனத்தில் வந்த பெண் ஒருவரை தடுத்து நிறுத்தி உள்ளனர். .

அப்போது அந்த பெண் முகக்கவசம் அணியாமல் வந்ததால் அவருக்கு அபராதம் விதிக்க போலீசார் முயன்றுள்ளனர்.

ஆனால் தாம் புதுச்சேரி சுகாதாரத்துறையில் பணியாற்றியதாக கூறிய அவர், ஏற்கனவே ஒருமுறை அபராதம் காட்டியதால் மீண்டும் நான் ஏன் அபராதம் கட்டவேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் ஆவேசம் அடைந்த அந்த பெண், பெண் காவலர்களை தரக்குறைவாக பேசி இழிவுபடுத்தி பேசிய காட்சிகள் வெளியாகியுள்ளது. சாலை பெண் காவலர்களிடம் பெண் ஒருவரே தரக்குறைவாக பேசிய காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

காரைக்காலில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அனைவரும் முகக்கவசம் அணிந்து வெளியே செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.