- 2026

ஓரினசேர்க்கை டேட்டிங் இணையதளத்தில் தனது கணவரின் சுயவிவரத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த மனைவி தனக்கு விவாகரத்து தருமாறு கோரியுள்ளார்.

பெங்களூருவை சேர்ந்த பெண்மணி ஒருவர் தனது கணவர் ஓரினசேர்க்கை இணையதளத்தில் சுயவிவரம் பதிவிட்டு, தவறான பழக்கத்தில் இருப்பதாக கூறி விவாகரத்து கோரியுள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்மணி கூறுகையில், தங்களுக்கு இருவீட்டார் சம்மதத்துடன் 2018 ஆம் ஆண்டு முறைப்படி திருமணம் நடந்ததாகவும், ஆனால் தங்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை எனவும் கூறியுள்ளார்.

மேலும், தனது கணவர் குடும்ப வாழ்க்கையில் தன்னுடன் இணைந்து இல்லை எனவும், காரணம் கேட்டல் தான் மன உளைச்சலில் உள்ளதாக கூறுவார் அல்லது முறையாக உங்கள் வீட்டில் வரதட்சணை கொடுக்கவில்லை என பிரச்சனை செய்வார்.

தனது உண்மையான வாழ்க்கை முறையை என்னிடம் கூறவில்லை, அவர் ஓரினசேர்க்கை முறையில் உள்ளார் என அந்த பெண்மணி கூறியுள்ளார்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: முன்னேற்பாடுகள் தீவிரம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending