military 3May
military 3May

ஜம்மு – காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவ 140க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் எல்லையில் தயார் நிலையில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் ராணுவ ஜெனரல்கள் இடையே பிப்ரவரி மாதம் நடந்த தொலைபேசி உரையாடலை அடுத்து, எல்லைப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.

நிதி சார்ந்த அதிரடி நடவடிக்கை அமைப்பின் ‘கிரே’ பட்டியலில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளவே பாக்., இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு உடன்பட்டது. இதனை பயன்படுத்தி, கடந்த ஆண்டு நம் ராணுவத்தினரால் தகர்த்து அழிக்கப்பட்ட கட்டமைப்புகளை பாகிஸ்தான் மறுசீரமைப்பு செய்து வருகிறது .

இந்நிலையில் ஜம்மு – காஷ்மீருக்குள் ஊடுருவ 140 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் எல்லையில் காத்திருப்பதாக ராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்திய ராணுவத்துக்கு அஞ்சி பயங்கரவாதிகள் இதுவரை ஊடுருவல் முயற்சியில் ஈடுபடவில்லை. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின், ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடமாட்டம் முற்றிலுமாக குறைந்துள்ளது.

ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!

அவர்கள் மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதிகள், மலைப்பகுதிகளில் உள்ள குகைகளில் தஞ்சம் அடைந்திருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. வரும் 15ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளதால் நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending