woman 2
woman 2

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் ஒரு பெண்ணிடம் நிர்வாணமாக பூஜை செய்தால் அதிக பணம் கிடைக்கும் என்று கூறி அந்தப் பெண்ணை போலி சாமியார் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாசிக்கில் போலி சாமியார் ஒருவர் பெண்ணை நிர்வாணப்படுத்தி பூஜை நடத்தி அவரை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் தற்போது வெளிவந்த நிலையில் போலீசார் அந்த போலி சாமியார் மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேரை கைது செய்துள்ளனர்.

இதில் மேலும் அதிர்ச்சியூட்டும் வகையில் இந்த சம்பவத்திற்கு அவரது கணவன் துணையாக இருந்துள்ளார்.

போலீசார் அந்த போலி சாமியாரிடம் நடத்திய விசாரணையில், ஆரம்பத்தில் அந்த பெண்ணின் கணவருக்கு ஆசை வார்த்தை கூறி பின்னர் அவர் மூலம் அவரது மனைவியை அழைத்து வந்து நிர்வாணமாக சில பரிகாரங்களை செய்யும்படி கூறியுள்ளனர். அப்படி செய்தால் உங்கள் வீட்டில் செல்வம் செழிக்கும் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளனர்.

சாமியாரின் பேச்சைக் கேட்டு அந்த பெண்ணும் நடந்து கொண்டுள்ளார். பின்னர் அந்த பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது சம்பந்தம் உள்ளதா, வேறு பல பெண்களையும் சாமியார் சித்திரவதை செய்துள்ளாரா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending