IPL 2023: 3 ஆண்டுகளுக்குப் பின் ஆட வந்து ஆட்ட நாயகன் ஆன மோகித் சர்மா

ipl 2023 matches - 2026
#image_title

ஐ.பி.எல் 2023 – 14ஆம் நாள் – 13.04.2023
— முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

ஐ.பி.எல் 2023 தொடரின் 14ஆம் நாளான நேற்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் அணி வென்றது. பஞ்சாப் அணியை (153/8, மேத்யூ ஷார்ட் 36, பானுகா 20, ஜித்தேஷ் 25, சாம் கரண் 22, ஷாருக் கான் 22, மோஹித் ஷர்மா 2/18) குஜராத் அணி (154/4, கில் 67, சாஹா 30, சாய் சுதர்ஷன் 19, மில்லர் 17) 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

கடந்த போட்டியில் ரிங்கு சிங் அதிரடியால் கையிலிருந்த வெற்றியை கோட்டை விட்ட குஜராத்துக்கு இம்முறை கேப்டனாக ஹர்திக் பாண்டியா திரும்பினார். அவர் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப்புக்கு முதல் ஓவரிலேயே பிரப்சிம்ரன் சிங் டக் அவுட்டாகி ஏமாற்றினார். கடந்த போட்டியில் நங்கூரமாக நின்ற கேப்டன் ஷிகர் தவானும் 8 ரன்களில் அவுட்டாகி சென்றார். அதனால் 28/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய அந்த அணிக்கு அடுத்ததாக வந்த மேத்தியூ ஷார்ட் அதிரடியாக விளையாட முயற்சித்து 6 பவுண்டரி 1 சிக்சருடன் 36 (24 பந்துகள்) ரன்களில் ஆட்டமிழந்தார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

அவருடன் இம்பேக்ட் வீரராக விளையாடிய பனுகா ராஜபக்சா தடுமாறி 20 (26 பந்துகள்) ரன்களிலும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜித்தேஷ் சர்மா 25 (23 பந்துகள்) ரன்களிலும் அவுட்டாகி பின்னடைவைக் கொடுத்தனர். அதனால் 115/4 என தடுமாறிய பஞ்சாப் 150 ரன்களை தொடுமா என்ற சந்தேகம் நிலவிய போது கடைசி நேரத்தில் தமிழக வீரர் ஷாருக்கான் அதிரடியாக 1 பவுண்டரி 2 சிக்சருடன் 22 (22 பந்துகள்) ரன்களும் சாம் கரண் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 22 (9 பந்துகள்) ரன்களும் எடுத்து போராடி அவுட்டானார்கள். அதனால் ஓரளவு தப்பிய பஞ்சாப் 20 ஓவர்களில் 153/8 ரன்கள் எடுத்தது.

குஜராத் சார்பில் அதிகபட்சமாக மோகித் சர்மா 2 விக்கெட்களை எடுத்தார்.

அதனைத் தொடர்ந்து வெற்றிக்கு 154 ரன்கள் என்ற இலக்குடன் ஆடத்தொடங்கிய குஜராத்துக்கு ஆரம்பத்திலேயே சுப்மன் கில்லுடன் இணைந்து 5 பவுண்டரியை பறக்க விட்டு 48 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து, ரித்திமான் சஹா அதிரடியான தொடக்கம் கொடுத்தார். அவர் 30 (19 பந்துகள்) ரன்களில் அவுட்டாக அடுத்த களமிறங்கிய தமிழக வீரர் சாய் சுதர்சன் 2வது விக்கெட்டுக்கு நங்கூரமாக செயல்பட்டு 41 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் கடைசி வரை அதிரடியாக ஆட முடியாமல் 19 (20 பந்துகள்) ரன்களில் நடையை கட்டினார்.

ALSO READ:  FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

அந்த நிலைமையில் களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் தடுமாறி 8 (11 பந்துகள்) ரன்களில் அவுட்டானார். ஆனால் மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாகவும் அதிரடியாகவும் செயல்பட்ட சுப்மன் கில் ரன் ரேட்டை சரிய விடாமல், அரைச் சதமடித்து குஜராத்தை வெற்றி பாதைக்கு அழைத்து வந்தார்.

அதனால் வெற்றியை நெருங்கிய அந்த அணிக்கு சாம் கரண் வீசிய கடைசி ஓவரில் வெறும் 6 ரன்கள் மட்டுமே ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அதிரடியாக விளையாட முயற்சித்த சுப்மன் கில் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 67 (48 பந்துகள்) ரன்களில் க்ளீன் போல்ட்டானார்.

அதனால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் 3ஆவது பந்தில் ராகுல் திவாடியா சிங்கிள் எடுக்க 4வது பந்தில் மில்லர் சிங்கிள் எடுத்தார். அதனால் பரபரப்பு ஏற்பட்டாலும் 5வது பந்தில் பவுண்டரியை பறக்க விட்ட திவாடியா 5* ரன்களும் மில்லர் 17* (18) ரன்களும் எடுத்தனர்.

இதனால் குஜராத் அணி 19.5 ஓவரில் 154/4 ரன்கள் எடுக்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் ஆட வந்த மோஹித் ஷர்மா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories