நான் நினைத்திருந்ததை விட படு முட்டாள்: ப.சிதம்பரத்தை விட்டு விளாசும் சு.சுவாமி!

Published:

சென்னை:

ப.சிதம்பரம் பயத்தின் காரணத்தால் லண்டனுக்கு ஓடி விட்டாரா என்ன? அப்படியானால், நான் நினைத்திருந்ததை விட ப.சிதம்பரம் படு முட்டாள் என்று விளாசித் தள்ளியிருக்கிறார் பாஜக., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி.

அவர் தனது டிவிட்டர் பதிவில் வழக்கம் போல் சிதம்பரத்தையும் அவர் மகன் கார்த்தியையும் கலாய்த்திருக்கிறார். வெகு காலமாகவே ப.சிதம்பரத்தை ஊழல்வாதி என்று சொல்லித் திட்டுவதை விட, பக்காத் திருடன் என்றே டிவிட்டரில் குறிப்பிட்டு வருவார் சு.சுவாமி. அதனை குறிப்பிடும் வகையில், பிசி., – பாபா சோர் என்று தந்தை திருடன் என்றும், பிசி – பேடா சோர் – மகன் திருடன் என்றும் இருவரையும் குறிப்பிட்டு வரும் சு. சுவாமி, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் இன்று கார்த்தி கைது செய்யப் பட்டிருப்பதற்கு சிபிஐக்கு வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்துக் கொண்டுள்ளதுடன், சிபிஐ, புதிய தலைமையின் கீழ் உத்வேகம் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

chidambaram karthi - 2026

ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், லண்டனில் இருந்து திரும்பியபோது சென்னை விமான நிலையத்தில் சிபிஐ.,யால் புதன்கிழமை இன்று காலை கைது செய்யப்பட்டார். இதுகுறித்து சுப்ரமணியன் சுவாமி கூறியபோது…

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

“இவ்வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் என்று நான் நம்புகிறேன். இது சிபிஐ.,யின் தலைசிறந்த சாதனை. இவ்விவகாரத்தில் முறையான ஒத்துழைப்பு அளிப்பதற்காக கார்த்தி சிதம்பரத்துக்கு சிபிஐ போதிய கால அவகாசம் அளித்தது. ஆனால், அவை அனைத்தையும் கார்த்தி புறக்கணித்து விட்டார். மேலும் தவறான தகவல்கள் மற்றும் வாக்குமூலங்களையும் அளித்துள்ளார். தன் மீது போதிய ஆதாராங்களுடன் சரியான குற்றச்சாட்டுகள் இருந்த போதும் இந்த வழக்கில் பல பொய்களைக் கூறி வழக்கின் போக்கை திசை திருப்ப நினைத்தார். ஆனால் தற்போது சிறைக்குச் செல்லப் போகிறார்” என்றார்.

கடந்த 2007ஆம் ஆண்டு, மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கியதில் பெருமளவில் முறைகேடு நடந்துள்ளதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

Chidambaram - 2026

இந்த முறைகேடுக்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், தனது தந்தை நிதியமைச்சர் என்ற பதவியை தவறாகப் பயன்படுத்தி உடந்தையாகச் செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ.,யும், அமலாக்கத் துறையும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

முன்னதாக இது தொடர்பில் கைது செய்யப் பட்ட கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமனின் காவல், அமலாக்கத் துறை கேட்டுக் கொண்டதற்கிணங்க மேலும் 3 நாள்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் கார்த்தி சிதம்பரமும் இன்று காலை சிபிஐ.,யால் கைது செய்யப் பட்டுள்ளார்.

 

முன்னதாக, சுப்பிரமணியம் சுவாமி தனது டிவிட்டர் பதிவு ஒன்றில் குறிப்பிட்ட கருத்து கவனிக்கத் தக்கது. ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் வழக்கு விவகாரத்தில் ப.சிதம்பரத்துக்கு ஆதரவானவர்கள் குறுக்கிடுவதை தடுத்துள்ளதுடன், இந்த விவகாரங்களில் இருந்து விலகியிருக்கிறார் ந.மோடி என்பது ஒரு நல்ல அம்சம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அலோக் வர்மாவின் கீழ் செயல்படும் சிபிஐ., சுதந்திரமாக செயல்படும் என்று கூறியுள்ளார் சுவாமி.

இதனிடையே ஒருவரின் டிவிட்டை ரிடிவிட் செய்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, அதில் கூறியுள்ள கருத்தை ஆமோதித்துள்ளார். கார்த்தி சிதம்பரம் இன்று காலை கைது செய்யப் பட்டார். நேற்று இரவு ப.சிதம்பரம் லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றார். அவர் இன்னும் லண்டனில் இறங்கவில்லை. இனிமேல்தான் இறங்கப் போகிறார். ஆனால், அவர் பெயரில் ஊடகங்களுக்கு கார்த்தி சிதம்பரத்தின் கைதுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கைகள் அனுப்பப் பட்டுள்ளன. அந்த அறிக்கை விமானத்தில் இருந்த படியே அனுப்பப் பட்டதா? அது எப்படி? – என்று ஆச்சரியத்துடன் கேட்கப் பட்ட கேள்வியை, அதானே என்று சுவாமியும் கேட்டுள்ளார்.!

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

 

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img