eci dates tendative - 2026

உத்தேச தேர்தல் தேதி: பணிகளைத் தொடங்க தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை

Featured இந்தியா சற்றுமுன்
eci dates tendative - 2026
#image_title

வரும் 2024 மக்களவைத் தேர்தலுக்கான உத்தேச தேர்தல் தேதியை அறிவித்து சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது .  அதன்படி வரும் ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி தொடங்கி எத்தனை கட்டங்களாக தேர்தல் நடத்தப்படலாம் என்பது குறித்த ஆலோசனைகளை தெரிவிக்குமாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

தற்போது ஆட்சியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி  தலைமையிலான அரசு வரும் 2024 மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது . இதன் பின்னர் நடத்தப்படக்கூடிய அரசு மே மாதத்தின் விரைவில் பதவி ஏற்றாக வேண்டும்.  இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில் மத்தியில் தேர்தல்கள் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.  இது தொடர்பாக பல்வேறு மாநிலங்களுக்கும் தகவல்கள் கேட்டு. அந்தந்த மாநிலங்களில் நடைபெறக்கூடிய முக்கியமான விழாக்கள்,  பண்டிகைகள்,  பள்ளி கல்லூரி தேர்வு தினங்கள் உள்ளிட்டவை குறித்து தகவல்கள் அளிக்குமாறு கோரியிருந்தது.

 இந்நிலையில் ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி தொடங்கி எத்தனை கட்டங்களாக தேர்தல்கள் நடத்தலாம் என்பது குறித்து தில்லியின் 11 மாவட்டங்களுக்கு உத்தேச தேர்தல் தேதியை அறிவித்து அதன்படி ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. எனவே ஏப்ரல் மே மாதங்களில் எந்தெந்த நாட்களில் எந்த மாநிலங்களில் தேர்தல்கள் நடத்தப்படக் கூடும் என்பது குறித்த முடிவினை விரைவில் எடுத்து, மார்ச் மாத மத்தியில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் அதனால் பாஜக., சார்பில் அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு என் மண் என் மக்கள் பாத யாத்திரை பிப்ரவரி மத்தியில் நிறைவு பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. சென்னையில் நிறைவுறும் அந்த நிகழ்வில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, பேச இருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.