ஜுஹுலன் கோஸ்வாமி தபால் தலை வெளியிடு

இந்தியா சற்றுமுன்

இந்திய பெண்கள் கிரிக்கெட் வீராங்கனை ஜுஹுலன் கோஸ்வாமி, ஒரு நாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை (200 விக்கெட்டுகள்) வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். அவரை கவுரவிக்கும் வகையில் கொல்கத்தா விளையாட்டு பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் நினைவு தபால் தலை வெளியிட்டப்பட்டது.

இந்த தபால் தலையில் வீராங்கனை ஜுஹுலன் கோஸ்வாமியின் உருவப்படத்துடன், கொல்கத்தாவின் முக்கிய இடமாக விளங்கும் விக்டோரியா நினைவு இல்லமும் இடம் பெற்றுள்ளது.

கொல்கத்தா விளையாட்டு பத்திரிக்கையாளர் சங்கத்தில் நடைபெற்ற விழாவில் இந்த தபல் தலையை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவ்ரவு கங்குலி வெளியிட்டார்.

Capture - 2026

வீராங்கனை ஜுஹுலன் கோஸ்வாமி கவுரவப்படுத்தப்பட்டுள்ளதற்கு முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை லிசா ஸ்தாலேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

மேற்கு வங்கத்தில் 1982ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி பிறந்த இவர், 2007ம் ஆண்டுக்கான ஐசிசி பெண்கள் கிரிக்கெட் வீராங்கனை விருதை வென்றுள்ளார். 2008 முதல் 2011ம் ஆண்டு வரை இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டனாவும், அதிவேக பந்து வீச்சாளராகவும் இருந்துள்ளார். 2010ல் அர்ஜுனா, 2012ல் பத்மஸ்ரீ விருதுகளையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.