காதில் இயர்போனுடன் பள்ளி வேனை ஓட்டியதில்… ரயில் மோதி 13 குழந்தைகள் உயிரிழப்பு!

இந்தியா சற்றுமுன்

school van accident - 2026

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 13 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கு வேன் ஓட்டுநரே காரணம் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கோரக்பூரில் இருந்து 50 கி.மீ., தொலைவில் இருக்கும் குஷிநகரில் துதிஹி என்ற இடத்தில் டிவைன் மிஷன் என்ற பள்ளியின் வேன் 22 குழந்தைகளுடன் சென்று கொண்டிருந்தது. ஆளில்லாத ரயில்வே கிராஸிங்கை கடக்க முயன்றபோது, அந்த வழியாக ஷிவானில் இருந்து கோரக்பூருக்குச் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் வருவதை அறியாமல், வேன் ஓட்டுநர் வேனை ஓட்டிச் சென்றார். அப்போது, ரயில் மோதியதில் வேன் கவிழ்ந்து உருக்குலைந்தது.

இந்த விபத்தில் வேனின் ஓட்டுநர் மற்றும் 13 குழந்தைகள் உயிரிழந்தனர். மற்ற குழந்தைகள் படுகாயமடைந்த நிலையில் அந்தப் பகுதியில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு மாநில அரசின் சார்பில் தலா ரூ.2 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்துக்கு ஓட்டுநரின் கவனக்குறைவே காரணம் என்றுன், அவர் காதில் இயர்போன் மாட்டிக் கொண்டு வேனை ஓட்டியிருக்கிறார் என்றும் யோகி ஆதித்யநாத் குறிப்பிட்டார்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.