நேபாள பசுபதிநாதர் கோயிலில் வழிபட்ட மோடி: பார்வையாளர் பதிவேட்டில் உருக்கம்!

Published:

janakitemple visitorbook2 - 2026

நேபாள நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள புகழ்பெற்ற பசுபதிநாதர் கோயிலில் இன்று வழிபாடு செய்தார்.

காலை முக்திநாத் தலத்தில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடுகளைச் செய்த மோடி, பின்னர் பசுபதிநாதர் கோயிலில் வழிபாடுகளைச் செய்ய்து, அங்கிருக்கும் பார்வையாளர் பதிவேட்டிலும் தனது கருத்துகளைப் பதிவு செய்தார்.

janakitemple visitorbook1 - 2026

முன்னதாக நேற்று ஜனகபுரி சீதா கோயிலில் உள்ள பார்வையாளர் பதிவேட்டில் தனது எண்ணத்தை மோடி எழுதியபோது, ஜனகபுரி தலத்துக்கு யாத்திரை வருவது என்பது என் வெகுநாள் ஆசை. அது இன்று நிறைவேறியுள்ளது. பாரத நேபாள மக்களை ஒருங்கிணைக்கும் இந்த யாத்திரை எனது மிகச்சிறந்த அனுபவம். நேபாள நாட்டு மக்களின் வாழ்விலும் ஜனகபுரி வாசிகளின் வாழ்விலும் அமைதியும் வளமும் நிறைய வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

modi visitor book nepal - 2026

அதுபோல், இன்று பசுபதிநாதர் கோயிலில் வழிபட்டார் பிரதமர் மோடி. அப்போது, பார்வையாளர் பதிவேட்டில் அழகாகத் தன் எண்ணத்தைப் பதிவு செய்தார். பகவான் பசுபதிநாதர் கோயிலில் பிரார்த்தனை செய்துகொள்வதாகக் குறிப்பிட்ட அவர், இந்தக் கோயில் பாரத, நேபாள மக்களின் வாழ்வில் தார்மீக ரீதியான இடத்தைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், நேபாள மற்றும் பாரத மக்களின் வாழ்க்கையில் அமைதியும் வளமும் பெற்று, சங்கடங்கள் நீங்கி நல்லன நடக்க வேண்டிக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ:  FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img