31 May16 congress - 2026ஆளுநரை சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி,
ஆளுநரிடம் எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை அளித்துள்ளோம் பெரும்பான்மையை பார்க்கும்படி ஆளுநரிடம் வலியுறுத்தினோம். நிலையான அரசை அமைக்க எண்ணிக்கை எங்களிடம் உள்ளது என்று தெரிவித்தோம். சட்ட நிபுணர்களுடன் ஆலோசிப்பதாக ஆளுநர் தகவல் தெரிவித்துள்ளார்.

117 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதத்தை ஆளுநர் வஜூபாய் வாலாவிடம் கொடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் குமாரசாமி. காங். தலைவர் பரமேஷ்வர் தலைமையில் அக்கட்சி எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் பெங்களூர் குயின்ஸ் சாலையிலுள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்வர் சித்தராமையா, காங். மேலிட தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றனர்.

இதேபோல தனியார் ஹோட்டலில், குமாரசாமி தலைமையில் கூடியது, மஜத எம்எல்ஏக்கள் கூட்டம். எடியூரப்பா தலைமையில் பாஜக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம், மல்லேஸ்வரத்திலுள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. ஒவ்வொரு கட்சியிலும் ஆட்சி அமைப்பது குறித்த வாத, விவாதங்கள் தூள் பறந்தன. தங்கள் கட்சி முடிவுக்கு ஆதரவாக எம்எல்ஏக்கள் கையெழுத்திட்டனர். கூட்டம் முடிந்த பிறகு காங்கிரஸ் எம்எல்ஏக்கள், ராம்நகரம் மாவட்டம் பிடதி அருகேயுள்ள ஈகிள்டன் ரிசார்ட்டில், தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்கள், கூட்டணி ஆட்சிக்கு அளித்த சம்மத கடிதத்தோடு ஆளுநரை இன்று மாலை குமாரசாமி, பரமேஸ்வர், மொய்லி ஆகியோர் சந்தித்தனர். அப்போது தம்மை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று ஆளுநரிடம் உரிமை கோரினார் குமாரசாமி. 117 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதங்களையும் ஆளுநரிடம் கொடுத்தார் குமாரசாமி.

ALSO READ:  சதுரகிரி கோவிலுக்கு தாணிப்பாறை வழியாக மட்டும் செல்ல வேண்டும்: ஆட்சியர் உத்தரவு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending