பாகிஸ்தானின் அத்துமீறல்களால் இந்த முறை வாகா எல்லையில் இனிப்பு பரிமாற்றம் இல்லை!

இந்தியா சற்றுமுன்
2017 ஆம் வருடம் ஈத் திருநாளை ஒட்டி வாகா எல்லையில் இனிப்பு பரிமாறிக் கொண்டபோது,...
2017 ஆம் வருடம் ஈத் திருநாளை ஒட்டி வாகா எல்லையில் இனிப்பு பரிமாறிக் கொண்டபோது,…

 

பாகிஸ்தான் தொடர் அத்துமீறில்களில் ஈடுபடுவதால், இந்த முறை ரம்ஜான் பண்டிகைக்கு வாகா எல்லையில் இனிப்புகள் பறிமாறப்படவில்லை.

ஒவ்வொரு வருடமும் பாகிஸ்தானுடனான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் உள்ள வாகாவில், இரு நாட்டு ராணுவ வீரர்களும் ரம்ஜானுக்கு இனிப்பு பரிமாறிக் கொள்வது வழக்கம். ஆனால், எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் படை தொடர்ந்து அத்துமீறித் தாக்குதல் நடத்திவருவதால், இந்த முறை இந்த இனிப்பு பரிமாற்றத்துக்கு எதிர்ப்பு எழுந்தது.

இதை அடுத்து, வாஹா எல்லையில் இந்திய – பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், ரம்ஜான் பண்டிகைக்கு இனிப்புகளை பறிமாறிக் கொள்ளவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.