பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் எங்கள் வரம்பில் இல்லை: வழக்கைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம்

Published:

04 June18 Petrol Bunk - 2026

புது தில்லி: பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கை தில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்வது எங்கள் வரம்பில் இல்லை, இது அரசின் கொள்கை முடிவு. அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்று கருத்து தெரிவித்தது நீதிமன்றம்.

பெட்ரோல் , டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வதாக புகார் தெரிவித்து, மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி மனு தாரர் வழக்கைப் பதிவு செய்தார்.

ஆனால் இந்த மனு மீது கருத்து தெரிவித்த நீதிமன்றம்,  பெட்ரோல் விலை நிர்ணயம் குறித்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று கூறி, குறிப்பிட்ட விலையை நிர்ணயம் செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img