மாபெரும் பயனைத் தரும் மாதுளம் பூ!

Published:

Pomegranate flower
Pomegranate flower

மாதுளம் பூவிற்கு அதிக ஆற்றல் உண்டு. மாதுளம் பூவிற்கு வாய்ப்புண்கள்,குடல் புண்களை ஆற்றுகிற தன்மை உண்டு. இரும்பு, கால்சியம் சத்துக்கள் நிறைந்தது.ரத்த மூலத்தை குணப்படுத்துவதில் மாதுளம் பூக்கள் பெரிய பங்கு வகிக்கின்றன.

ரத்த சோகை உள்ளவர்கள் வாரத்தில் ஒரு நாள் மாதுளம் பூவைச் சாப்பிட்டு வந்தால் ரத்தம் விருத்தி அடையும். உடல் உஷ்ணத்தை குறைத்து குளிர்ச்சியைத் தரும் ஆற்றல் மாதுளம் பூவிற்கு இருப்பதால். உஷ்ண உடல் வாகு உள்ளவர்கள் சாப்பிடலாம்.

வெள்ளைப்படுதலைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் மாதுளம் பூவிற்கு உள்ளதால், வயதுக்கு வந்த பெண்களுக்கு தர, ஆரோக்கியம் மேம்பட்டு உடல் பலப்படும்.

மாதுளம் பூவின் மருத்துவ குணங்கள்
மாதுளம் பூவை பாலில் ஊறவைத்து தேன் கலந்து சாப்பிட்டால் நரம்புத்தளர்ச்சி குணமாகும்.

மாதுளம் பூவை உலர்த்து பொடியாக்கி அருகம்புல் சாறுடன் சேர்த்து சாப்பிட்டால் இருமல் தீரும்.

மாதுளம் பூவை அப்படியே சாப்பிட்டாலே ரத்தம் சுத்தமடைய உதவும்.

மாதுளம் பூவை அரைத்து நீரில் கலந்து தேன், எலுமிச்சை சாறு சேர்ந்து கொப்பளித்து மெதுவாக விழுங்கினால் தொண்டைப் புண் ஆறும்.

ALSO READ:  இடதுசாரிகளின் இரட்டை வேடம்: தியானமென் சதுக்கமும் ஜன்தர்மந்தரும்!

மாதுளம் பூவை அரைத்து தயிரில் கலந்து சாப்பிட்டால் பேதி நிற்கும்.

பூ இரத்தத்தைச் சுத்தப்படுத்தி இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் மற்றும் சிவப்பணுக்கள் எண்ணிக்கையை கூட்டி, ஹீமோ குளோபின் அளவை சீர் செய்ய சிறந்த மருந்தாக காணப்படுகிறது.

உடல் உஷ்னத்தினால் சில சமயங்களில் சிறுநீருடன் ரத்தம் கலந்து வெளியேறும்.இதற்கு தலை சிறந்த மருந்து என்றே கூறலாம்
மாதுளம் பூ, கசகசா,வேப்பம் பிசின் ஆகியவற்றை அரை ஸ்பூன் அளவு எடுத்து காலை, மாலை என இரு வேளையும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீருடன் ரத்தம் கலந்து வருவது நிற்கும்.

இரத்த மூலத்தினால் அவதி படுபவர்கள் அதிக செலவு செய்யாமல் மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், விரைவில் இரத்த மூலத்திலிருந்து விடு படலாம்.

புழு வெட்டு பிரச்சனையால் தலையில் வழுக்கை போன்று உள்ளதா? மாதுளம் பூ சாறு எடுத்து அந்த இடத்தில் தேய்த்து வர விரைவில் புழு வெட்டு சரியாகும்.

மாதுளம் பூவை நிழலில் உலர்த்தி அதனை பொடியாக்கி கஷாயம் செய்து தினமும் காலை,மாலை 2 வேளையும் அருந்தி வந்தால் இரத்தம் சுத்தமடையும் உடலும் புத்துணர்வு பெறும். அல்லது காலையில் நான்கு மாதுளம் பூவை
சாப்பிட்டு சிறிது பால் குடிக்க வேண்டும்.
தொடர்ந்து 45 நாட்கள் உட்கொண்டுவர ரத்தசுத்தி அடையும்.உடல் நன்கு பலப்பட மாதுளம் பூவை நிழலில் உலர்த்தி தூளாக்கி அதனுடன் தேன் கலந்து
சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடைந்து நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.

  1. பெண்கள் மாதுளம் பூவை கஷாயம் செய்து காலை வேளையில் அருந்திவந்தால் கருப்பை வலுவடையும். அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வாயு தொல்லை உடையவர்கள் மாதுளம் பூவை கஷாயம் செய்து அருந்துவது நல்லது.
ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!

ஆண்களுக்கு மாதுளை பூவை காயவைத்துபொடி செய்து அதனுடன் அருகம்புல் பொடி‌கலந்து தேனில் குழைத்து ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாது விருத்தியடையும்.

மாதவிலக்கு நிற்கும் காலமான மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு கை, கால், இடுப்பு மூட்டுக்களில் வலி உண்டாகும். இவர்கள் மாதுளம் பூவை நிழலில் காயவைத்து பொடியாக்கி
கஷாயம் செய்து இருவேளை அருந்தி வந்தால் இப்பிரச்சனைகள் நீங்கும். அதுபோல வெள்ளைபடுதல்
குணமாகும்.

மாதுளம் பூக்களை தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி வெப்பநோய் தீரும்.

மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாக சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.

மாதுளம் பூக்களை அரைத்து அத்துடன் இரண்டு மடங்கு நீர் விட்டுக் காய்ச்சவும். கொதித்து சுண்டியதும் இறக்கி வடிகட்டி அத்துடன் சிறிது தேன், எலுமிச்சைச்சாறு சேர்த்து கலந்து, வாயில் ஊற்றிக் கொப்பளித்து தொண்டைக்குள் மெதுவாக இறக்கவேண்டும். இதனால் தொண்டைக்கமறல், தொண்டையில் ரணம் போன்றவை குணமடையும்.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

தினமும் காலையில் நான்கு மாதுளம் பூக்களை மென்றுதின்று பால் குடித்து வர ரத்தம் சுத்தமடையும்.

Related articles

Recent articles

spot_img