December 9, 2024, 6:41 AM
25.7 C
Chennai

கொரோனா நெருக்கடிக்கு மத்தியில், தேசவிரோத சக்திகளின் சதிகள் குறித்தும் எச்சரிக்கை தேவை: ஆர்.எஸ்.எஸ்.,!

datrareya hosabale
datrareya hosabale

ஆர்.எஸ்.எஸ். அகில பாரத பொதுச் செயலாளர், ஸ்ரீதத்தாத்ரேயா ஹோஸபாலே இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது…

நம் நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் மிகப் பெரிய சவாலாக எழுந்துள்ளது.

தொற்றின் வேகமும், தீவிரமும் இம்முறை கடுமையாக உள்ளது. நாட்டின் பல பகுதிகள் பாதிக்கப் பட்டுள்ளன. அதிகப் படியான மக்கள் தொற்றுக்கு ஆளாகி, மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டு வருகின்றனர். நூற்றுக் கணக்கான குடும்பங்கள் தங்கள் அன்பானவர்களை இழந்துள்ளன. இந்தப் பேரிடரால் பாதிக்கப்பட்ட இவர்கள் அனைவருக்கும் ஆர்.எஸ்.எஸ்., தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது

நிலைமை கடும் சவாலாக இருந்தாலும், நமது சமுதாயத்தின் சக்தி மிகப் பெரியது. கடுமையான இடர்களையும் சந்திக்கும் நமது ஆற்றல் பற்றி உலகமே அறியும். பொறுமை, உற்சாகம், சுயகட்டுப்பாடு, பரஸ்பர உதவி மூலம் இந்த நெருக்கடியில் இருந்து நாம் மீள்வோம் என்பது உறுதி.

கொரோனா திடீர் என வேகமாகப் பரவுவதால், நோயாளிகளுக்கு படுக்கை, ஆக்சிஜன் மற்றும் மருந்துகளுக்கு மருத்துவமனையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பாரதம் போன்ற மிகப் பெரிய தேசத்தில், பிரச்சனைகள் திடீரென பெரியதாகி விடுகின்றன. இதை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

ALSO READ:  ரயில் பயணங்களில் ஓர் அனுபவம்!

மருத்துவத் துறையினர், பாதுகாப்புத் துறையினர், துப்புரவுத் தொழிலாளர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து தங்கள் கடமைகளைச் செய்து வருகிறார்கள். ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் நாடு முழுவதும் பல்வேறு சேவைப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். பல்வேறு சமூக அமைப்புகளும், ஆன்மீக அமைப்புகளும், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து சேவைப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்

அதேநேரத்தில், சமுதாயத்தில் உள்ள சில நாசகார மற்றும் விஷம இயக்கங்கள், இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி நாட்டில் குழப்பம் மற்றும் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடவும் வாய்ப்புகள் உள்ளது. நாட்டுக் குடிமக்கள் ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடும் நேரத்தில், இது போன்ற விஷம கும்பல்களின் சதி குறித்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இந்த நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க ஸ்வயம்சேவகர்கள், சமூக அமைப்புகள், ஆன்மீக அமைப்புகள், சேவை அமைப்புகள், வர்த்தக நிறுவனங்கள், தொழில்துறையினர் அனைவரும் உடனடியாக ஆவன செய்ய வேண்டும். எந்தச் சூழ்நிலையையும் வெற்றிகரமாக சமாளிக்க முன்வர வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். கேட்டுக் கொள்கிறது.