பூரி சப்பாத்திக்கு.. மாங்காய் முரப்பா!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
mango murapa
mango murapa

மாங்காய் முரப்பா

தேவையானவை:
நீண்ட கிளி மூக்கு மாங்காய் – 6,
சர்க்கரை – 200 கிராம்,
தோல் நீக்கி, துருவிய இஞ்சி – 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு – அரை டீஸ்பூன்,
தேன் – 2 டீஸ்பூன்.

செய்முறை:
மாங்காய்களைக் கழுவி தோல் நீக்கி துருவிக் கொள்ளவும். இத்துடன் இஞ்சித் துருவல் உப்பு, சர்க்கரை சேர்த்துக் கிளறி, ஒரு ஜாடியில் போட்டு, வெள்ளைத் துணியால் வாய்க்கட்டு கட்டி, நல்ல வெயிலில் ஒரு வாரம் வைத்து எடுக்கவும். மாந்துருவல் பாகு போல் ஆனதும் தேன் சேர்த்துக் கிளறவும்.

இது… பூரி, சப்பாத்தி, சமோசாவுக்கு தொட்டுக் கொள்ள உகந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.