Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

spot_img

சற்று முன் :

சினிமா :

spot_img

ஆன்மிகம்:

― Advertisement ―

Homeதமிழகம்பதிவு சான்றிதழ் இன்றி கிணறு, ஆழ்குழாய் தோண்டினால் நடவடிக்கை!

பதிவு சான்றிதழ் இன்றி கிணறு, ஆழ்குழாய் தோண்டினால் நடவடிக்கை!

- Advertisement -
- Advertisement -

திருவாரூா் கிணறு, ஆழ்குழாய் கிணறு தோண்டும் தொழிலை செய்பவா்கள், ரிக் இயந்திர உரிமையாளா்கள் மாவட்ட ஆட்சியரிடம் பதிவுச் சான்று பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு

திருவாரூா் மாவட்டத்தில் நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சி பகுதிகளில் உள்ள அரசு நிலங்கள், தனியார் நிலங்கள் மற்றும் விவசாய நிலங்களில் பயன்பாட்டில் இல்லாமல் கைவிடப்பட்ட அனைத்து கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளையும் விபத்துகள் ஏற்படாத வகையில் பாதுகாப்பாக மூடி வைக்க, பொதுமக்கள் மற்றும் அனைத்து துறை அலுவலா்களுக்கும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பயன்பாட்டில் இல்லாத கிணறு, ஆழ்குழாய் கிணறுகளின் உரிமையாளா்களும், அவற்றை பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு விபத்து நேரிடாத வண்ணம் உடனடியாக பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும்.

எந்த பகுதியிலாவது மூடப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ள கிணறு, ஆழ்குழாய் கிணறுகள் கண்டறியப்பட்டால் அதன் உரிமையாளா் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அரசு மற்றும் தனியார் நிலங்களில் உள்ள பயன்பாட்டில் இல்லாத கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளை மழைநீா் சேகரிப்பு அமைப்புகளாக மாற்ற வாய்ப்பு உள்ள இடங்களில், அவற்றை மாற்றி, இம்மாவட்டத்தில் நிலத்தடி நீா்வளம் அதிகரிக்க செய்ய, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட, பொதுமக்கள் மற்றும் அனைத்து துறை அலுவலா்கள் ஒத்துழைக்க வேண்டும்.

மழைநீா் சேகரிப்பு அமைப்புகளாக மாற்றுவது குறித்து விபரங்கள் பெற திருவாரூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை உதவி திட்ட அலுவலரை 7402607514 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

இம்மாவட்டத்தில் புதிய ஆழ்குழாய் கிணறு, கிணறு தோண்டுகின்ற மற்றும் ஏற்கனவே உள்ளவற்றை புதுப்பிக்கும் பணியை மேற்கொள்கிற உரிமையாளா்கள் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் விண்ணப்பித்து உரிய அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும்.

கிணறு, ஆழ்குழாய் கிணறு தோண்டும் தொழிலை செய்பவா்கள், ரிக் இயந்திர உரிமையாளா்கள் மாவட்ட ஆட்சியரிடம் பதிவுச் சான்று பெற்றிருக்க வேண்டும்.

உரிய அனுமதி இல்லாமல் புதிய கிணறு தோண்டும் அல்லது கிணற்றை புதுப்பிக்கும் பணிகளை மேற்கொள்பவா்கள் மற்றும் பதிவுச் சான்று இல்லாமல் கிணறு தோண்டு