December 6, 2025, 1:03 PM
29 C
Chennai

பாராளுமன்றத்தில் புறநானூறுக்கு பதிலடி திருக்குறள் அசத்திய ஆண்டிமுத்துராசா……!

bjp mp - 2025

நாட்டின் வரிவிதிப்பு முறை கடுமையாக இருக்கக்கூடாது என்பதை, புறநானூற்றுப் பாடல் வரிகளை மேற்கோள் காட்டி நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் விளக்கியதற்கு திமுக எம்பி ஆ.ராசா திருக்குறள் மூலம் பதில் கொடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் கடந்த ஜூலை 5ம் தேதி நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது, வரி விதிப்பு முறை குறித்தும் வரி வசூல் குறித்து பேசிய அவர், புறநானூற்றில் பிசிராந்தையார் பாடிய ‘யானை புக்க புலம் போல’ என்ற பாடலை மேற்கோள் காட்டி விளக்கம் அளித்தார். அந்த பாடல் வரிகள் வருமாறு:-

‘காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே
மாநிறை வில்லதும் பன்னாட் காகும்
நூறுசெறு வாயினும் தமித்துப் புக்கு உணினே
வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே
கோடி யாத்து நாடு பெரிது நந்தும்
மெல்லியன் கிழவனாகி வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு
பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின்
யானை புக்க புலம் போலத்
தானும் உண்ணான் உலகமும் கெடுமே’

“வயலில் விளைந்துள்ள நெற்கதிர்களை அறுத்து, நெல்மணிகளை பிரித்து அரிசியாக்கிப் பின் சோற்றுக் கவளமாக்கி யானைக்கு உண்ணத் தந்தால், ஒரு துண்டு நிலத்தில் விளையும் அரிசியும் கூட அந்த யானைக்குப் பலநாள் உணவாகும்.

அப்படிச் செய்யாமல் அந்த யானையையே வயலுக்குள் சென்று பயிரை மேயுமாறு விட்டுவிட்டால், அதன் வாய்க்குள் செல்லும் நெல்லை விட அதன் கால் பட்டுக் கசங்கும் கதிர்களே மிகுதியாக இருக்கும்.

அதேபோல வரித் திணிப்புச் செய்து, இரக்கமின்றித் தன் குடிமக்களைக் கசக்கிப் பிழிந்து வரிவசூல் செய்ய அரசன் முற்பட்டால், அந்த நாடு ‘யானை புக்க புலம்’ போல அவனுக்கும் பயன் தராமல், மக்களும் பயன்கொள்ள வழியில்லாமல் சீர்கெடும்” என்பதுதான் அந்த பாடலின் விளக்கம்.

இந்நிலையில் புறநானூறு பாடலை சுட்டிக்காட்டி பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமனுக்கு, பதிலடி கொடுக்கு விதமாக திமுக எம்பி ஆ.ராசா திருக்குறள் ஒன்றை குறிப்பிட்டு பட்ஜெட்டினை விமர்சித்துள்ளார்.

dmk mp - 2025

அவர் கூறுகையில், ‘ஈற்றலும் இயற்றலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு’ எனும் திருக்குறள் வரியினை மேற்கோள் காட்டி, ‘உற்பத்தி செய்தல், சேமித்தல், முதலீடு செய்தல், முன்கூட்டியே திட்டமிடல் இந்த நான்கையும் மன்னன் செய்திட வேண்டும்.

என்னைப் பொருத்தவரை இந்த 4 அம்சங்களில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் முற்றிலும் தோற்றுவிட்டது’ என விளக்கம் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories