மயங்கிய மணமகள் ! நின்ற திருமணம் !

அடடே... அப்படியா? தமிழகம் பொது தகவல்கள்

maraige 1 - 2026கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே இடைக்கோடு பகுதியை சேர்ந்த ஒரு இளைஞருக்கும், பாகோடு பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் நேற்று கல்யாணம் ஏற்பாடு செய்யப்பட்டது.

பாகோடு பகுதியில் உள்ள ஒரு சிஎஸ்ஐ சர்ச்சில்தான் கல்யாணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரு வீட்டு தரப்பிலும் உறவினர்கள், நண்பர்கள் திருமணத்திற்கு வர ஆரம்பித்துவிட்டனர்.

மணமகனின் கையில், மணமகளின் கையை பிடித்து கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு பிறகுதான் தாலி கட்டும் நிகழ்வு நடக்கும். அதற்கு முன்பு சபை போதகர் வாக்குறுதிகளை வாசிப்பதும், அந்த வாக்குறுதிகளை மணமக்கள் ஏற்றுக் கொள்வதாக பதிலுரைப்பதும் வழக்கம். போதகரும் வாக்குறுதிகளை வாசிக்க ஆரம்பித்தார்.

ஆனால் மணப்பெண்ணிடம் இருந்து பதிலே வரவில்லை. திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதை பார்த்து சர்ச்சில் இருந்த எல்லாரும் அதிர்ச்சி அடைந்தனர். மணப்பெண் வீட்டுக்காரர்கள் அவரை சர்ச்சின் உள்பகுதியில் உள்ள அறைக்கு தூக்கிச் சென்றனர்.

உடனடியாக மருத்துவர் வரவழைக்கப்பட்டார். மணப்பெண்ணை பரிசோதித்து  பார்த்துவிட்டு, ஒரு பிரச்சனையும் இல்லை என்றும் திருமணத்தை நடத்துமாறும் கூறினார், அந்த சமயம் கல்யாண பெண் திடீரென்று மருத்துவரின் கரத்தைப் பிடித்து தன்னை காப்பாத்துமாறும், தனக்கு இத்திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும் கூறினார்.

இதனை ஏதேச்சையாக செவியுற்ற மணமகன் மணப்பெண்ணை தனிமையில் சந்தித்து பேசிப் பார்த்தார்.பெண் மறுத்துவிட்டாள். மணமகனைத் தொடர்ந்து இரு வீட்டாரும் பேசிப் பார்த்தனர்.

தனது முடிவில் தீர்மானமாகயிருந்த மணப்பெண்,எதற்கும் மசியவில்லை.இதன் பின் கட்டாயப்படுத்தி திருமணம் செய்வதால் சிக்கல் தான் என முடிவு செய்த போதகரும் திருமணத்தை நிறுத்துமாறு  சொல்லிவிட்டார்.

உடனே பெண் வீடு, மாப்பிள்ளை வீடு இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டை போட்டு கொள்ள ஆரம்பித்தனர். அங்கிருந்தவர்கள் அவர்கள் சர்ச்சையினால் சர்ச்சை விட்டு அவ்ர்களை வெளியேற்றினார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.