யோ-யோ டெஸ்டில் தேறாத அம்பாத்தி ராயுடு

சற்றுமுன் விளையாட்டு

15 June16 rayudu - 2026அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட அணியிலிருந்து அம்பாத்தி ராயுடு நீக்கப்படலாம் என்று தெரிகிறது, காரணம் உடற்தகுதி சோதனையில அவர் சோபிக்கவில்லை.

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி, இந்திய கேப்டன் விராட் கோலி உள்ளிட்டோர் பெங்களூருவில் ஃபிட்னெஸ் டெஸ்ட் மேற்கொண்டனர், இதில் ராயுடுவும் ஒருவர்.

கடந்த ஐபிஎல் போட்டிகளில் ராயுடு 149 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 602 ரன்களைக் குவித்தார். இதனையடுத்து இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் தேர்வானார். கடைசியாக ஒருநாள் சர்வதேசப் போட்டியில் 2016-ல் ஆடிய ராயுடு யோ-யோ டெஸ்டில் தேற வேண்டியிருந்தது. யோ-யோ டெஸ்ட்டில் தேறுவது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

யோ-யோ டெஸ்டில் குறைந்தது 16:1 என்று தேற வேண்டும். பிசிசிஐ இன்னமும் இதனை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் ராயுடு யோ-யோவில் தேறவில்லை என்று தெரியவந்துள்ளது. ராயுடுவுக்குப் பதில் வேறொரு வீரரை தேர்வுக்குழுவினர் அறிவிக்கவுள்ளனர்.

யோ-யோ டெஸ்ட்டில் தேற வேண்டும் என்பதில் சமரசம் இல்லை என்பதால் ஏற்கெனவே மொகமத் ஷமி, இந்தியா அணியிலிருந்தும், சஞ்சு சாம்சன் இந்தியா ஏ அணியிலிருந்தும் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.