Homeசற்றுமுன்கிரிக்கெட்: வரலாற்று சிறப்புமிக்க ‘1000’-மாவது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி

கிரிக்கெட்: வரலாற்று சிறப்புமிக்க ‘1000’-மாவது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி

04 Aug 05 england win - Dhinasari Tamilபர்மிங்காம் நகரின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணியின் 1000-மாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பர்மிங்காம் நகரின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த டெஸ்ட் போட்டி இந்தியாவை விட இங்கிலாந்துக்குதான் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், இங்கிலாந்து 1877-ம் ஆண்டில் இருந்து இதுவரை 999 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளது. இந்த டெஸ்ட் இங்கிலாந்து அணியின் வரலாற்று சிறப்புமிக்க 1000-வது டெஸ்ட் ஆகும்.

இந்த டெஸ்ட் போட்டியின் 4-வது நாளில் இந்தியாவை 31 ரன்களில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்து அணி இதுவரை 1000 டெஸ்ட் போட்டிகளில் 358-ல் வெற்றியும், 297-ல் தோல்வியையும், 345 போட்டிகளில் டிராவையும் சந்தித்துள்ளது.

எட்ஜ்பாஸ்டனில் இதுவரை இங்கிலாந்து 1902-ல் இருந்து 51 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 28 போட்டிகளில் வெற்றியும், 8-ல் தோல்வியும், 15-ல் டிராவும் செய்துள்ளது.

1000-வது டெஸ்டில் விளையாடிய இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டிற்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,118FansLike
376FollowersFollow
68FollowersFollow
74FollowersFollow
3,228FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

சிவகார்த்தின் அதிதி நடிக்கும் மாவீரன் படப்பிடிப்பு இன்று துவங்கியது

பிரபலமான பிரமாண்ட இயக்குனர் சங்கர் மகள் , அதிதி ஷங்கர் விருமன் படத்தில் கார்த்தி...

என் திரைப்பயணம் சிறப்பானதாக இருந்தது ஆனால்?-நடிகை மல்லிகா ஷெராவத்..

என்னிடம் விட்டு கொடுக்கும் மனப்பான்மை இல்லாததாலே பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வில்லை என்று கமல்ஹாசன்...

விக்னேஷ் சிவன்-நயன் திருமணம் விரைவில் ஓடிடியில்..

விக்னேஷ் சிவன்-நயன்தாராவின் திருமண போட்டோஷூட் ஒன்றை பகிர்ந்து விரைவில் வீடியோ வருகிறது என ஓ.டி.டி....

அஞ்சலி-நடிகர் பிரதாப் போத்தன் காலமானார்..

தமிழ் மலையாளம் தெலுங்கு இந்தி படங்களில் பிரபல நடிகராகவும் திரைப்பட இயக்குனர் தயாரிப்பாளராக வலம்...

Latest News : Read Now...