இன்று புதுவை வருகிறார் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு

புதுவை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் மாணவர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு இன்று புதுவை வருகிறார்.

அங்கு அவரை புதுவை முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு உயர் அதிகாரிகள் வரவேற்கின்றனர். பின்னர் அங்கிருந்து குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு புதுவை பல்லைக்கழகம் செல்கிறார். புதுவை பல்கலைக்கழகத்தை பார்வையிட்ட பின்னர் அவர் மாணவர்களுடன் கலந்துரையாட இருக்கிறார்.

தொடர்ந்து புதுவை அரசு சார்பில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் வெங்கய்யா நாயுடு பங்கேற்கிறார். அன்றைய தினம் மாலையே டெல்லி புறப்பட்டு செல்கிறார்.