கூத்தாட்டுக்குளம் கோயிலில் மருந்து பிரசாதம் இன்று முதல் வழங்கல்

இந்தியா சற்றுமுன்

14 July16 Koothattukulam - 2026கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கூத்தாட்டுக்குளம் ஸ்ரீதரீயம் அவுஷதேஸ்வரி கோயிலில், நோய் தீர்க்கும் மருந்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி இன்று முதல் ஆகஸ்ட 16 வரை நடக்கிறது.

எர்ணாகுளத்தில் இருந்து 46 கிலோ மீட்டர் கோட்டயத்தில் இருந்து 37 கிலோ மீட்டர் துாரத்தில் கூத்தாட்டுக்குளத்தில், பிரபலமான ஸ்ரீதரீயம் ஆயுர்வேத கண் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனை வளாகம், நெல்லிக்காட்டு மனாவில் அவுஷதேஸ்வரி கோயில் உள்ளது. இங்கு ‘மருத்துவ கடவுள்’தன்வந்திரி சுவாமிக்கு தனிக்கோயில் உள்ளது. இங்கு ஆடி மாதத்தில் பக்தர்களுக்கு பிரசாதமாக நோய் தீர்க்கும் மருந்து வழங்கப்படுவது வழக்கம்.
ஆயுர்வேத சுவடிகளில் குறிப்பிட்டுள்ளவாறு, மூலிகை மருந்துகளை கொண்டு, ஆயுர்வேத மருத்துவ வல்லுநர்கள் முன்னிலையில் தேவி மந்திரங்கள் கூறி பூஜை, சடங்குகளுடன் இந்த மருந்து தயாரிக்கப்படுகிறது. பின்னர் தேவிக்கு நைவேத்யம் செய்யப்படும். பாரம்பரியமாக நடந்து வரும் இந்நிகழ்ச்சியில் நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு மருந்து பிரசாதம் பெறுவர்.

இந்த ஆண்டிற்கான விழா இன்று காலை 6:௦௦ மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. பின்னர் யானைகளுக்கான கஜபூஜை நடக்கிறது. திரைப்பட நடிகர் ஜெயராம், பஞ்சாரி மேளம் இசைக்க பூஜைகள் துவங்குகிறது. பின்னர் பக்தர்களுக்கு மருந்து பிரசாதம் வழங்கப்படும். ஆக.,16 வரை, தினமும் காலை 6:00 முதல் மதியம் 12:00 மணி வரையும், மாலை 5:00 முதல் இரவு 7:00 வரையும் பிரசாதம் வழங்கப்படும்.

ஆக., 6 காலை 9:00 மணிக்கு மருந்து பொங்கலிடும் நிகழ்ச்சி நடக்கிறது. பொங்கல் வைக்க விரும்பும் பக்தர்கள் இதில் பங்கேற்கலாம். மருந்து பிரசாத சேவா மாதத்திற்கான ஏற்பாடுகளை கோயில் தலைவர் என்.பி.நாராயணன் நம்பூதிரி, ஸ்ரீதரீயம் தலைமை மருத்துவர் டாக்டர்.நாராயணன் நம்பூதிரி, விழா ஒருங்கிணைப்பாளர் ஹரி நம்பூதிரி செய்துள்ளனர்.மேலும் விபரங்களுக்கு 94478 75067ல் தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.