முதல்வர் பதவியை குறிவைத்து இயங்கும் ஓபிஎஸ்., ‘தில்’லி பயணம்?

Published:

ops maithreyan - 2026

அ.தி.மு.க-வில் உட்கட்சிப் பூசல் நிலவுவதாகவும், ஓபிஎஸ் முதல்வர் பதவியை நோக்கி காய் நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் தில்லி சென்று மத்திய அமைச்சர் மற்றும் பி.ஜே.பி தலைவர்களைச் சந்திப்பதன் பின்னணி குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.

பி.ஜே.பி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக, மக்களவையில் தெலுங்குதேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்த்து, அ.தி.மு.க வாக்களித்த நிலையில், தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ் தில்லி சென்று பி.ஜே.பி தலைவர்களைச் சந்தித்து இருப்பது பல்வேறு யூகங்களை கிளப்பி விட்டிருக்கின்றன.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை ஓ.பன்னீர் செல்வம் சந்திக்க இருந்தார். ஆனால், நிர்மலா சீதாராமன், ஓ.பி.எஸ்ஸை சந்திக்கவில்லை. தற்போது, பி.ஜே.பி தலைவர்கள் சிலரையும் ஓ.பி.எஸ் சந்தித்துப் பேசவுள்ளார். இத்தகவலை ஓ.பன்னீர் செல்வத்துக்கு நெருக்கமான அ.தி.மு.க நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். உண்மையில் ஓபிஎஸ்ஸின் தில்லி பயண பின்னணி என்ன என்பதுதான் இப்போதைய ஹாட் டாபிக்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img