தமிழகத்துக்கு 12 டிஎம்சி நீர் தர ஆந்திரா ஒப்புதல்: செப். 15ம் தேதி திறக்க வாய்ப்பு

DAM - 2026

சென்னை: தமிழகத்துக்கு 12 டிஎம்சி நீர் தர ஆந்திர அரசு ஒப்புதல் அளித்துள்ளதால்,  வரும் 15ம் தேதி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. சென்னை மாநகர மக்களின் குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய நான்கு ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11 டிஎம்சி.

இதை தவிர்த்து ஒப்பந்தப்படி தெலுங்கு கங்கா திட்டத்தின் மூலம் கிருஷ்ணா நீரும் சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. ஆண்டுக்கு 12 டிஎம்சி வீதம் ஒப்பந்தப்படி கிருஷ்ணா நீர் வழங்க வேண்டும். ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சியும் வழங்க வேண்டும். இந்நிலையில், தற்போது சென்னை மாநகரில் உள்ள 4 ஏரிகள் வறண்டு வரும் சூழ்நிலையில், கிருஷ்ணா நீர் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, கடந்த ஜூலை 1ம் தேதி முதல் தவணை காலம் தொடங்கியது. இந்த காலத்தில் 8 டிஎம்சி தர வேண்டும். ஆனால், 68 டிஎம்சி கொள்ளளவு கொண்ட கண்டலேறு அணையில் 3 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. இதனால், அங்கிருந்து தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், தென்மேற்கு பருவமழை தாக்கம் காரணமாக சைலம் அணைக்கு வரும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

215 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் 209 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. அங்கிருந்து 78 டிஎம்சி கொள்ளளவு கொண்ட சோமசீலா அணைக்கு தண்ணீர் திறக்க வேண்டும். அந்த அணையில் இருந்து கண்டலேறு அணைக்கு நீர் திறந்தால் மட்டுமே சென்னைக்கு தண்ணீர் கிடைக்கும்.

ALSO READ:  10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

எனவே, ஒப்பந்தப்படி தண்ணீர் பெற சென்னை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ஜெயராமன் தலைமையில் பொறியாளர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் ஆந்திர மாநில நீர்வளத்துறை தலைமை பொறியாளரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில், ஒப்பந்தப்படி 12 டிஎம்சி நீர் தர ஆந்திர நீர்வளத்துறை ஒப்பதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது, சைலம் அணையில் இருந்து சோம சீலா அணைக்கு 12,781 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது 78 டிஎம்சி நீர் கொள்ளளவு கொண்ட சோம சீலா அணையில் தற்போது 20 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது. இந்த அணையில் 23 டிஎம்சிக்கு மேல் நீர் இருந்தால்தான் கண்டலேறு அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டும்.

ஓரிரு நாளில் 23 டிஎம்சியை எட்டும் என்பதால், கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் இருக்க வாய்ப்பு உள்ளது. கண்டலேறு அணையில் 8 டிஎம்சி தண்ண்ணீர் இருந்தால் மட்டுமே தண்ணீர் திறக்க முடியும். இதைத்தொடர்ந்து வரும் 15ம் தேதிக்குள் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ALSO READ:  அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Topics

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Entertainment News

Popular Categories