ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம்!

இந்தியா சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்

perarivalan - 2026

புது தில்லி: பேரறிவாளன், முருகன் உள்பட 7 பேரின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலையில் தொடர்புடைய 7 பேரை விடுதலை செய்வது குறித்து முடிவு செய்ய தமிழக ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாக உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

ராஜிவ் கொலையாளிகள் 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசின் முடிவை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக ஆளுநருக்கு முழு அதிகாரம் உண்டு. அவர்கள் 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம்.

06 July17 Supreme Court - 2026

எனவே, 2016 இல் தங்களை விடுவிக்கக் கோரி சம்பந்தப் பட்டவர்களால் அளிக்கப் பட்ட மனு குறித்து ஆளுநர் முடிவெடுக்கலாம் எனக் கூறி மத்திய அரசின் மனுவை முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம்.

ALSO READ:  காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை... முக்கியத்துவம் என்ன?

தமிழகத்தில் இன்று பெரும் பரபரப்புடன் எதிர்பார்க்கப் பட்டது இந்த விவகாரம் என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.