ஆப்கன் அபார பந்துவீச்சு; இந்திய அணியின் வெற்றியைப் பறித்தது!

இந்தியா சற்றுமுன் விளையாட்டு

afgjham india - 2026

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் பரபரப்பான ஆட்டத்தில் தனது அபார பந்துவீச்சால், இந்திய அணியின் வெற்றியை பறித்து போட்டியை சமன் செய்தது ஆப்கானிஸ்தான் அணி.

ஆசிய கோப்பை சூப்பர் 4 பிரிவில் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்றது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆப்கன் அணியின் முகமது ஷேசாத், ஜாவித் அஹ்மதி தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

முகமது ஷேசாத் 116 பந்தில் 11 பவுண்டரி, 7 சிக்சருடன் 124 ரன் குவித்தார். முகமது நபி 56 பந்தில் 64 ரன் அடித்தார். ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் சேர்த்து, 253 ரன்னை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

தொடர்ந்து களம் இறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுல், அம்பதி ராயுடு களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடி நூறு ரன் சேர்த்தனர். அம்பதி ராயுடு 57 ரன்னில் ஆட்டமிழக்க தொடர்ந்து லோகேஷ் ராகுல் 60 ரன்னில் ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக் ஒருபுறம் நிதானமாக ஆட மறுபுறம் கேப்டன் தோனி 8 ரன், மனீஷ் பாண்டே 8 ரன், கேதார் ஜாதவ் 19 ரன், தினேஷ் கார்த்திக் 44 ரன் என வரிசையாக ஆட்டமிழந்தனர்.

ஆப்கன் வீரர்கள் சிறப்பாக பந்து வீசினர். ரவீந்திர ஜடேஜா மட்டும் தாக்குப் பிடித்து ஆடி வந்தார். இறுதி ஓவரை வீசிய ரஷித் கான் ஜடேஜாவை ஆட்டமிழக்கச் செய்து, இந்தியாவின் வெற்றியைப் பறித்தார். ஆட்டம் சமனில் முடிந்தது. இந்திய அணி 49.5 ஓவர்களில் 252 ரன்னுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து சமன் செய்தது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.