அயோத்தியை விட்டுக் கொடுத்தால் காசி, மதுரா பிரச்னைகள் எழாது: தேசிய சிறுபான்மை ஆணைய தலைவர்

இந்தியா சற்றுமுன் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
Syed Gayoorul Hasan Rizvi says build ram temple - 2026

புது தில்லி: தேசிய சிறுபான்மை ஆணைய தலைவர் கோயாருடல் ஹசன் ரிஸ்வி ஞாயிற்றுக்கிழமை, உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில், வழக்கில் தொடர்புடைய அனைவரிடமும் வைத்து, நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காணும்படி ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தில், இது இந்துக்களின் நம்பிக்கை சார்ந்த விஷயம் என்பதால், முஸ்லிம்கள் பெரிய மனதுடன் நடந்து கொள்ளும்படி அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்த விவகாரத்தில் இரு தரப்பு சமாதானப் பேச்சுகளின் போது, அயோத்தி பிரச்னையில் முஸ்லிம்கள் இணங்கிச் சென்று விட்டுக் கொடுத்தால், காசி மதுரா உள்ளிட்ட மற்ற இடங்களில் உள்ள மசூதிகள் குறித்த பிரச்னைகள் வராமல் பார்த்துக் கொள்வோம் என்று உறுதி அளித்திருக்கிறார்.

அயோத்தி, மதுரா, காசி உள்ளிட்ட பெரும்பாலான இந்துக்களின் புனிதத் தலங்களை இடித்து விட்டு மொஹலாய ஆட்சியில் இஸ்லாமிய மன்னர்கள் மசூதிகளைக் கட்டியுள்ளனர். அந்த இடங்களில் எல்லாம் இந்துக்கள் தங்கள் வழிபாட்டு உரிமைக்காக போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.