கஜா புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சரிடம் கேட்டறிந்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

இந்தியா தமிழகம் லைஃப் ஸ்டைல்
ramnath khovind - 2026

கஜா புயல் பாதிப்புக்கள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டறிந்ததாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

இகுதுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்பு கொண்டு பேசியதாகவும், அப்போது, கஜா புயல் பாதிப்புக்குப் பின் தற்போதுள்ள நிலவரம் குறித்து கேட்டறிந்ததாகவும் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும், கஜா புயலால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிப்பதாகக் கூறியுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசும், இந்திய மக்களும் துணை நிற்பார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.