மம்தாவுக்கு தோள் கொடுக்கும் ராகுல் முடிவுக்கு மேற்கு வங்க காங்கிரஸார் எதிர்ப்பு!

இந்தியா புகார் பெட்டி
kolkatta meeting mamta banarjee - 2026

மம்தாவுக்கு தோள் கொடுக்கும் ராகுல் முடிவுக்கு மேற்கு வங்க காங்கிரஸார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேற்கு வங்காள, பிரதேச காங்கிரஸ் கமிட்டியினர் ராகுல் பேச்சுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அடாவடி நடவடிக்கைகளுக்கு எதிராக மிகப் பெருமளவில் போராட்டம் நடத்தப் போவதாக மேற்குவங்க காங்கிரஸ் கமிட்டி தெரிவித்துள்ளது

ஆனால் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியும் மம்தா பானர்ஜிக்கு ஆதரவு கொடுத்து பதிவு செய்திருந்தார். இந்த பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மாநில காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களை அறிவித்துள்ளனர்

முன்னதாக சிபிஐ அதிகாரிகளை மேற்கு வங்க போலீசார் கைது செய்த விவகாரத்தில் மம்தா பானர்ஜியின் நடவடிக்கைகளை ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவு செய்து இருந்தார். “நான் மம்தா பானர்ஜியிடம் பேசினேன் அவருடைய போராட்டத்திற்கு தோளோடு தோள் கொடுப்பேன் என்று நான் அவரிடம் கூறினேன்! அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பாசிச கட்சிகளுக்கு எதிராக போராட வேண்டும்” என்று காந்தி ராகுல் காந்தி ட்விட்டரில் தெரிவித்திருந்தார்

இந்நிலையில் ராகுலின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மேற்குவங்க காங்கிரஸ் கமிட்டியினர் புதன்கிழமை மிகப் பெரும் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.