pakistan terror funding - 2026

காஷ்மீரில் நடைபெற்ற கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது

இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து இயங்கும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு காரணம் என்று அந்த அமைப்பு பொறுப்பேற்ற நிலையில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது

பயங்கரவாதிகளுக்கு சொர்க்க பூமியாக பாகிஸ்தானை மாற்றுவதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தருவதை இத்துடன் நிறுத்திக் கொள்ளாவிட்டால் விளைவுகள் விபரீதமாகும் என்றும் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் வியாழக்கிழமை ஜெய்ஷ்-இ-முகமது இஸ்லாமிய பயங்கரவாதிகள் மதத்தின் பெயரால் நிகழ்த்திய தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர்

இந்நிலையில் பாகிஸ்தானை அழைத்து அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது.  பாகிஸ்தானை பயங்கரவாதிகளின் சொர்க்க பூமியாக மாற்றுவதையும் பாகிஸ்தான் மண்ணில் இருந்து பயங்கரவாத குழுக்கள் இயங்குவதையும் உடனடியாக நிறுத்த வேண்டும்! அவர்களது நோக்கம் குழப்பத்தையும் வன்முறையையும் பயங்கரவாதத்தையும் மதத்தின் பெயரால் பரப்புவது மட்டுமே என்பதை வெள்ளை மாளிகை ஊடக செயலர் சாரா சாண்டர் நேற்று இரவு தெரிவித்துள்ளார்

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல்கள் பயங்கரவாத எதிர்ப்புப் போரில் இந்தியாவையும் அமெரிக்காவையும் மேலும் மேலும் நெருங்கச் செய்யும் பிணைத்து வைக்கும் என்பதை  பாகிஸ்தான் உணரவேண்டும் என்று மிகக் கடுமையான மொழியில் வெள்ளை மாளிகை பாகிஸ்தானுக்கு தெரிவித்துள்ளது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending