இந்தியாதான் தாக்குதலே நடத்தலியே… பின்ன எதுக்கு இவ்ளோ ஆர்ப்பாட்டம் மிஸ்டர் இம்ரான் கான்!?

இந்தியா உலகம் கட்டுரைகள் சற்றுமுன்

imran khan modi - 2026

பாகிஸ்தான் பகுதியில் தாக்குதல் நடத்தியதாக #இந்தியா சொல்வது பொய் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்ததாக தகவல் வெளியானது. இது இரு நாட்டு மக்களிடையேயும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தவில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முதலில் மறுப்பு தெரிவித்ததாக செய்தி வெளியானது.

பாகிஸ்தான் ஊடகங்களும் இதனை ஒரு பெரிய செய்தியாகப் பகிராமல், அமைதி காத்தன. ஒரு ஊடகம் இப்படி ஒரு தாக்குதலே நடக்கவில்லை, இந்தியா தேர்தலுக்காக பொய் சொல்கிறது என்று செய்தி வெளியிட்டிருந்தது. இன்னொரு ஊடகம், இந்திய விமானங்கள் எல்லைப் பகுதிக்குள் நுழைந்தன, ஆனால் அவை பாகிஸ்தானின் விமானங்களைக் கண்டதும் பின்வாங்கி ஓடிவிட்டன என்று தகவல் வெளியிட்டது. தொடர்ந்து, இந்திய விமானங்கள் குண்டு வீசின. ஆனால் அங்கே எதுவும் இல்லை; உயிர்ச்சேதமோ பொருட்சேதமோ எதுவும் இல்லை; காலி மனையில் குண்டு போட்டுவிட்டு இந்திய விமானங்கள் சென்றன என்று ஒரு நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.

இப்படி பல்வேறு விதமான தகவல்கள் பாகிஸ்தான் ஊடகங்களில் வந்து கொண்டிருக்க, இந்திய ஊடகங்களிலோ இதுதான் தலைப்புச் செய்தியானது.

terror camp - 2026

முன்னதாக, பாகிஸ்தான் பகுதியில் இந்தியா தாக்குதல் நடத்தியதாக சொல்வது பொய் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியிருந்தார். இந்திய விமானப்படை தாக்குதல் எதுவும் நடத்தவில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மறுப்பு தெரிவித்ததுடன், இந்திய விமானப்படை தாக்குதலில் பயங்கரவாதிகள் பலர் உயிரிழந்ததாக கூறப்படுவதையும் மறுத்தார். இந்திய அரசு பொறுப்பேற்ற மற்றும் கற்பனையான விஷயங்களை கூறி வருகிறது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறினார்.

இந்நிலையில், பாதுகாப்பு தொடர்பான அவசரக் கூட்டம் நடத்தியது பாகிஸ்தான். இதில், இந்தியா சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையும் மீறி வந்துள்ளது என்பதை சர்வதேச மன்றங்களில் சர்வதேச அளவில் எடுத்துக் கூறப் போவதாக பாகிஸ்தான் முடிவு செய்தது.

mirage airforcestrike - 2026

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் முகாம்கள் மீது இந்திய விமானப்படை இன்று தாக்குதல் நடத்தியதையடுத்து இம்ரான் கான் தலைமையில் உயர்மட்ட குழு கூடி ஆலோசித்தது. அதில் ராணுவ தலைமை தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்
அப்போது இந்தியா கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டைக் கடந்து, போர் ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தானுக்குள் புகுந்துள்ளது என்பதை சர்வதேச மன்றத்தில் எடுத்துக் கூறப் போவதாக முடிவு செய்யப்பட்டது!

இது குறித்த தகவல்களை பாகிஸ்தான் தெரிவித்ததும், அனைவரும் கேட்ட கேள்வி இதுதான்! இந்தியாதான் பாகிஸ்தான் மண்ணில் தாக்குதலே நடத்தவில்லையே! பின்னர் எதற்காக இப்படி அவசரக் கூட்டம், சர்வதேச மன்றம், சீனாவிடம் முறையிடல், பதில் தாக்குதல் எல்லாம் பாகிஸ்தான் மேற்கொள்ள வேண்டும் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுவருகின்றார்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.