இந்திய ராணுவ வீரர் பயங்கரவாதிகளால் கடத்தப் படவில்லை!

இந்தியா சற்றுமுன்

indian army - 2026

இந்திய ராணுவ வீரா் முகமது யாசின் என்பரை பயங்கரவாதிகள் கடத்தியதாக வெளியான தகவலை பாதுகாப்பு அமைச்சகம் மறுத்துள்ளது. மேலும், அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் விடுமுறையில் இருந்து வரும் இந்திய ராணுவ வீரா் முகமது யாசிம் என்பவரை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றிருப்பதாக தகவல் வெளியானது.

புட்காம் மாவட்டத்தில் உள்ள காசிபுராவில் உள்ள தனது வீட்டில் அவா் இருந்தபோது பயங்கரவாதிகள் சிலா் துப்பாக்கி முனையில் அவரை கடத்தின்ச் சென்றனர் என்று கூறப் பட்டது.

இந்தத் தகவலால் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் இந்த தகவலை பாதுகாப்புத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. ராணுவ வீரா் முகமது யாசின் கட்டத்தப்படவில்லை என்றும், அவா் பத்திரமாக இருப்பதாகவும் பாதுகாப்பு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.