பணத்தை திருடிய இளைஞரின் கையை வெட்ட; நீதிமன்றம் உத்தரவு !

இந்தியா கிரைம் நியூஸ்

jadejmend - 2026

கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த இளைஞர் ஒரு இளைஞர் சவூதியில் உள்ள ஹோட்டலில் வேலைசெய்து வந்துள்ளார்.

சுமார் 6 ஆண்டுகாலமாக அவர் அங்கு வேலை செய்துவந்த நிலையில் சமீபத்தில் 1.1 லட்சம் ரியால் அவர் வேலை செய்து வந்த கடையில் திருட்டு போனது,

அந்த பணத்தை ஆலப்புழா இளைஞர்தான் திருடி உள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த இளைஞரை சவூதிக்கு அழைத்துச் சென்ற நண்பர், திருடப்பட்ட பணத்தைக் கொடுப்பதாக உறுதி அளித்திருந்த நிலையில் அதை கட்டாமல் காலம் தாழ்த்தினார்.

பின்னர் போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து திருடிய இளைஞரின் அறையில் தீடீர் சோதனை நடத்தினர்.

அப்போது திருடுபோன பணம் அங்கு இருப்பது கண்டுபிடிக்ப்பட்டது. மேலும் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வந்தது. அதில் இளைஞர் மீதான குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்டது.

இதனையடுத்து சவூதி குற்றவியல் நீதிமன்றமானது திருடிய இளைஞரின் கையை வெட்ட உத்தரவிட்டுள்ளது.

இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.