பாகிஸ்தான் தற்காலிகமாக நிறுத்தியது! இந்தியா நிரந்தரமாக நீக்கியது! ‘நல்எண்ண விரைவுரயில்’!

Published:

samjhauta - 2026

காஷ்மீர் விவகாரத்தை முன்னிட்டு இந்திய பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் அரசு அந்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தூதரக உறவுகளை முதலில் முறித்துக் கொண்டது.

மேலும் இந்தியாவுடனான தொடர்புகளை படிப்படியாகக் குறைத்துக் கொள்வதாக அறிவித்தது. அத்துடன் வர்த்தக ரீதியாக இந்தியாவுடன் உறவுகளை முறித்துக் கொள்ளப் போவதாகவும் அறிவித்து, வாகா எல்லையை மூடியது.

மேலும், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இயங்கி வந்த சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் ரயில் (நல்லெண்ண விரைவு ரயில்) மற்றும் தார் எக்ஸ்பிரஸ் ரயில்களை தற்காலிகமாக நிறுத்தியது. தங்கள் நாட்டு எல்லைக்குள் இந்த ரயில்களை அனுமதிக்கப் போவதில்லை என்று திடீரென அறிவித்தது.

இதனால் அந்த ரயிலில் இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்த மற்றும் பாகிஸ்தானுக்குள் சென்று கொண்டிருந்த பயணிகள் பெரும் பாதிப்பை சந்தித்தனர். தொடர்ந்து இந்திய தரப்பில் உடனடி மாற்று நடவடிக்கை எடுக்கப் பட்டு, பயணிகள் பத்திரமாக அழைத்து வரப் பட்டனர்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

இந்நிலையில், ஆக.11 ஞாயிற்றுக் கிழமை இன்று இந்திய அரசு தில்லி மற்றும் அடாரி வழியாக லாஹூர் ரயில் நிலையத்துக்கு சென்று கொண்டிருந்த சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இது பாகிஸ்தான் மேற்கொண்ட தற்காலிக நிறுத்த நடவடிக்கையைத் தொடர்ந்து மேற்கொள்ளப் படுவதாக இந்திய தரப்பு தெரிவித்துள்ளது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img