இவர் வேட்டி கட்டினார்… தமிழகத்தில் பலருக்கு ‘அது’ அவிழ்ந்துவிட்டது..!

Published:

modi on dhoti - 2026

இவர் வேட்டியை கட்டியதைப் பார்த்ததும் தமிழகத்தில் இவரை எதிர்த்தவர்களுக்கு அவிழ்ந்துவிட்டது…. @BJP4India @BJP4TamilNadu @CTR_Nirmalkumar – வேட்டிக்குப் பின்னே உலவும் கதைகள் பல. அதில் இதுவும் ஒரு வகை.

சீன இந்திய உறவுகள் குறித்த பேச்சுக்களைக் காட்டிலும், மோடி கட்டிய வேட்டியும், கடற்கரையில் தமிழன் குடித்துவிட்டு தள்ளாடியபடி போட்டிருந்த டாஸ்மாக் சரக்கு பாட்டிலை அள்ளி குப்பையில் சேகரித்து மோடி கொட்டியதும்தான் இன்றைய சமூகத் தளங்களில் பெரிதும் எதிரொலித்தது. அதில் வேட்டி குறித்த பதிவுகள் பலரின் கவனத்தைக் கவர்ந்தன.

அவற்றில் சில….

https://twitter.com/bjpfantn/status/1182971427487510529

வேட்டி என்ற தமிழர் பாரம்பரியம் மட்டுமல்லாமல், கைவினைப் பொருள்கள், பாரம்பரிய பட்டுத் தறி நெசவு என்று உலக அரங்கில் ஊடகங்கள் மூலம் மோடி உணர்த்தியவை பல.

மாமல்லபுரம் கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இருந்த கைவினை பொருட்கள் கண்காட்சி மற்றும் செய்முறைகளை பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் பார்வையிட்டது உலக அரங்கில் விளம்பரப் படுத்தப் பட்டுள்ளது.

ஓட்டலில் வைக்கப்பட்டிருந்த கைவினைப் பொருட்கள் கண்காட்சி, வெண்கல பொருட்கள், சிற்பங்கள், குத்துவிளக்குகள் குறித்து ஜி ஜின்ங்கிற்கு விளக்கிக் கூறினார் மோடி. தொடர்ந்து பட்டு தயாரிக்கும் தறியை பார்வையிட்டபோது, தறியின் செயல்பாடுகள் குறித்து மோடி விளக்கினார்.

கோவை சிறுமுகையில் , மோடி, ஜின்பிங் உருவம் பொறித்த பட்டு சால்வை தயாரிக்கப்பட்டு ஓட்டலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை ஜின்பிங்கிடம் காண்பித்த மோடி, பட்டு சேலை ஒன்றையும் பரிசாக கொடுத்தார். பிரதமர் மோடியின் உருவம் பொறித்த சீன பீங்கான் தட்டை மோடிக்கு, ஜின்பிங் பரிசாக கொடுத்தார். தஞ்சாவூர் ஓவியங்களையும் இருவரும் பார்வையிட்டனர்.

https://twitter.com/vanamadevi/status/1183035328291983360

சின்ன சின்ன இழை
பின்னி பின்னி வர
சித்திர கைத்தறி சேலையடி.????
ஸ்ரீ ராமலிங்க சௌடாம்பிகை நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி சங்கம் சிறுமுகையில் நெய்து சீன அதிபருக்கு மரியாதை செய்யப்படுகிறது.
நம் பண்பாடு சேலை உடுத்துதல்
ஆண்கள் வேட்டி கட்டுதல்.

இதற்கு தான் பாரத நாட்டை பாரதீயர் ஆளணும்ன்றது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img