viramani dmk - 2026

இதுதான் உங்கள் பகுத்தறிவா..? வீரமணியை கோபத்தில் கொந்தளிக்கச் செய்த துர்கா ஸ்டாலின்… குறித்து செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், வீரமணிக்கு கேள்வி எழுப்பும் வகையில், மு.க.ஸ்டாலின் சர்ச்சில் பிரார்த்தனை செய்தது பகுத்தறிவில் சேராதா என்று கேட்கின்றனர் சமூக தளங்களில்!

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மனைவி துர்கா இன்று புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமை என்பதால் திருப்பதி ஏழுமலையானை சிறப்பு தரிசனத்தில் சென்று தரிசித்து திரும்பினார்.

இந்த புகைப்படம் வைரலானது. இதனையடுத்து திமுக அமைப்பு செயலாளர் பார்த்தசாரதியை தொடர்பு கொண்டு, திராவிட கழக தலைவர் வீரமணி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

“பெரியார் கொள்கையை யாரும் மதிப்பது இல்லை. ஸ்டாலின் மனைவி எல்லா கோவிலுக்கும் செல்கிறார். தென் சென்னை எம் பி தமிழச்சி தங்கபாண்டியன் விஜய தசமி அன்று அரசியில் ஓம் என்று எழுதுகிறார். இதுதான் உங்கள் பகுத்தறிவா? “என்று வீரமணி கோபத்தில் கொந்தளித்துள்ளார்.

ஆனால்..? நேற்று சர்ச்சில் ஸ்டாலின் பிரார்த்தனை செய்ததைப் பற்றி குறிப்பிட வில்லை வீரமணி. இதுதான் வீரமணியின் பகுத்தறிவு! மட்டுமல்ல… ஈ.வே.ரா வளர்த்த பகுத்தறிவும் கூட!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending