ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுர்ஜித் உயிரிழப்பு!

Published:

child step hole1 - 2026

ஆள்துளை கிணற்றில் விழுந்த இரண்டரை வயதுக் குழந்தை சுர்ஜித் உயிரிழந்து விட்டதாக வருவாய் துறை ஆணையர் அறிவித்துள்ளார். குழந்தை சுஜித் வில்சன் விழுந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல் வெளியிட்டார்.

இரவு 10.30 மணியில் இருந்தே துர்நாற்றம் வீசியதாக ராதாகிருஷ்ணன் தகவல் வெளியிட்டார்.

borewell - 2026

குழந்தை உயிரிழந்திருப்பதாகவும் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு! உடல் சிதைந்து இருப்பதாகவும் ராதாகிருஷ்ணன் தகவல்!

ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த குழந்தை சுஜித் உயிரிழந்த‌தாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

திருச்சி மணப்பாறை அருகே 25-ம் தேதி மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுஜித்தை மீட்கும் பணிகள் சுமார் 80 மணி நேரமாக நடைபெற்று வந்தது.

ரிக் இயந்திரத்தின் மூலம் 100 அடி வரை குழி தோண்டும் முயற்சிகள் தொடர்ந்தன. ஒரு ஆள் இறங்குமளவுக்கு ஒரு மீட்டர் அகலத்தில் இந்த குழி தோண்டப்பட்டு வந்தது.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

ஆழ்துளை கிணறு அருகே தோண்டப்பட்ட பள்ளத்தில் தீயணைப்பு படை வீரர் ஏணி மூலம் இறங்கி பாறையின் தன்மை குறித்து ஆய்வு செய்தார். குழந்தை மீட்புப்பணி நடக்கும் இடத்தில் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். மீட்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

இந்நிலையில், ஆழ்துளை கிணற்றில் இருந்து இரவு 10.30 மணியளவிலிருந்து குழந்தையின் உடலில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் அவரது கை சிதைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில், ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த குழந்தை உயிரிழந்த‌தாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். குழந்தை சுஜித் உயிர் பிழைக்க தமிழகமே பிரார்த்தனை செய்த நிலையில், சுஜித் உயிரிழந்தது தமிழகத்தையே சோக கடலில் மூழ்கச் செய்துள்ளது.

Related articles

Recent articles

spot_img