தில்லி விமான நிலையத்தில் ஆர்.டி.எக்ஸ் வெடிப்பொருள்! பாதுகாப்பு தீவிரம்!

Published:

dog - 2026

தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஆர்.டி.எக்ஸ் வெடிப்பொருள் நிரப்பப்பட்ட மர்ம பை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் மூன்றாவது முனையத்தில் ஒரு மர்ம பை கிடப்பது நள்ளிரவு 1 மணிக்கு கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் மர்ம பையை கைப்பற்றியதுடன் மோப்ப நாய் உதவியுடன் விமான நிலையம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர்.

மூன்றாவது முனையத்தில் இருந்து பயணிகள் வெளியேறும் பாதை மூடப்பட்டதுடன், அதன் வளாகத்தில் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது. இதனால் விமான நிலையத்தில் இருந்த பயணிகள் பீதியடைந்தனர்.

விமான நிலையத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பையில் சோதனையிட்டதில் அதில் ஆர்.டி.எக்ஸ் வெடிப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

delhi airport - 2026

வெடிப்பொருள் உள்ள மர்ம பையை வெடிகுண்டு நிபுணர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து பேசிய அதிகாரிகள், வெடிபொருளின் சரியான தன்மையை ஆய்வு செய்து வருகிறோம்.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

இந்த வெடிபொருள் அடுத்த 24 மணிநேரங்களுக்கு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது, அதன் பின்னரே அதைப் பற்றி ஏதேனும் உறுதியாகக் கூற முடியும். இது ஒரு வெடிகுண்டாகவோ அல்லது சக்திவாய்ந்த வெடிக்கும் சாதனமாக (IED) இருக்கலாம்,

ஆனால் தற்போது எதையும் சொல்வதற்கில்லை. இன்று அதிகாலை வெடிகுண்டுப் பை கண்டுபிடிக்கப்பட்ட அடுத்த இரண்டுமணிநேரம் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

விமான நிலைய வளாகத்தின் பாதுகாப்பை நாங்கள் அதிகரித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டதை தில்லி சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், வெடிப்பொருள் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!

Related articles

Recent articles

spot_img