வங்கதேசத்தை சேர்ந்த 3 பேர் கைது! கிருஷ்ணகிரியில் பரபரப்பு!

Published:

bangaladesh - 2026

கிருஷ்ணகிரி வெங்கடாபுரம் பகுதியை சார்ந்த பகுதியில் வங்கதேசத்தை சேர்ந்த பலர் பாஸ்போர்ட் விசா எந்த ஆவணமும் இன்றி தங்கியிருப்பதாக விஏஓ சரவணன், கிருஷ்ணகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் காவல்துறை இதுகுறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பாஸ்போர்ட், விசா இல்லாமல் இருந்த வங்கதேசத்தை சேர்ந்த இக்பால்முல்லா, தஸ்லிமா லக்கி ஆகியோரை காவல்துறை கைது செய்தனர்.

அவர்களிடம் காவல்துறை நடத்திய விசாரணையில் இக்பால் முல்லாவும், தஸ்லீமாவின் கணவர் மனைவி. அவர்கள் லக்கி இக்பால் முல்லாவின் நண்பர்கள். இக்பால் முல்லா புற்றுநோயால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதற்கு சிகிச்சைக்காக அவர் மும்பைக்கு வந்ததாகவும் தெரிகிறது.

அங்கிருந்து சென்னைக்கு, தனது மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் நண்பர்களுடன் வந்தனர்.

இந்த நிலையில் இப்பால் முல்லாவின் நண்பரான கொல்கத்தாவை சேர்ந்த இம்ரான் என்பவர் இக்பால் முல்லாவிடம் கிருஷ்ணகிரியில் தங்குமாறு தன் மருத்துவ செலவுக்காக பணம் அனுப்புவதாகவும் கூறியுள்ளார்.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

அதன்படி தனது மனைவி குழந்தைகள் மற்றும் நண்பர்களுடன் கிருஷ்ணகிரி தங்கியிருந்தது, தெரியவந்தது. அதன்பேரில் பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் அவர்களை கைது செய்த காவல்துறையினர் சென்னை புழல் சிறையில் மூவரையும் அடைத்தனர்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img