பொங்கல் போனஸ் யாருக்கு உண்டு? அரசு அறிவிப்பு!

Published:

tamil nadu secretariat tamil nadu assembly - 2026

தமிழக அரசு சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் ஆண்டு தோறும் பொங்கல் போனஸ் வழங்கி வருகிறது.

இந்த வருடத்திற்கான பொங்கல் போனஸ் தொகையாக அனைத்து சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், அனைத்து துறைகளிலும் தொகுப்பு ஊதியம் பெற்று வரும் பணியாளர்களுக்கும் பொங்கல் போனஸ் ரூ.1,000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

ஓய்வூதியம் பெற்று வருபவர்களில், சி மற்றும் டி பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், சத்துணவு, அங்கன்வாடி போன்றவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்,

குடும்ப ஓய்வூதியர்களுக்கும் பொங்கல் போனஸ் ரூ.500 வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img