டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு முயற்சி செய்து வருவதற்கு நடிகர் ரஜினிகாந்த் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் கடந்த 7-ம் தேதி திறக்கப்பட்டன. சமூக இடைவெளி இன்றி குடிமகன்கள் டாஸ்மாக் கடைகளில் அலைமோதியதால் கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ள நிலையில் டாஸ்மாக் குறித்து ரஜினிகாந்த் ட்விட்டரில் ஞாயிற்றுக்கிழமை கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து கஜானாவை_நிரப்ப நல்ல வழிகளை பாருங்கள் என்று ரஜினி தெரிவித்துள்ளார்.

