நெல்லை, தென்காசி மாவட்டத்தில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 5 கோடி கடன்!

சற்றுமுன் நெல்லை பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
tenkasi collector and minister rajalakshmi
tenkasi collector and minister rajalakshmi

நெல்லை, தென்காசி மாவட்டத்தில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 5 கோடி கடன்: அமைச்சர் ராஜலட்சுமி தகவல்!

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மகளிர் குழுக்களுக்கு உதவிடும் வகையில் முதல் கட்டமாக 67 குழுக்களுக்கு ரூ.5 கோடி கடன் வழங்கப்படுகிறது என திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, சங்கரன்கோவில் கிளையில் நடைபெற்ற விழாவில் தமிழக ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி தெரிவித்துள்ளார்.

விழாவில் தென்காசி மாவட்டம் ஆட்சித்தலைவர் அருண் சுந்தர் தயாளன், திருநெல்வேலி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் பெருந்தலைவர் தச்சை கணேச ராஜா, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர் மேலாண்மை இயக்குநர் குருமூர்த்தி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பிரியதர்ஷினி, முதன்மை வருவாய் அலுவலர் பாலகிருஷ்ணன் மற்றும் வங்கியின் நிர்வாக இயக்குநர்கள், உதவி பொதுமேலாளர்கள் பாஸ்கரன், ஜெயலெட்சுமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.