சாத்தான்குளம் விசாரணைக் குழுவில் சிபிஐ அதிகாரிகள் இருவருக்கு கொரோனா தொற்று!

Published:

cbi-investigation
cbi-investigation
  • சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு விசாரணை குழுவில் இடம்பெற்றிருந்த இரு சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று
  • காவலர்களிடம் அவசரமாக முடிக்கப்பட்ட விசாரணை
  • 3 பேருக்கும் ஆகஸ்ட் 5ஆம் தேதிவரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

சாத்தான்குளம் தந்தை மகன் இருவர் கொலை வழக்கில் ஏற்கனவே சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ், ஆய்வாளர் ஸ்ரீதர்,உள்ளிட்ட 5 போலிஸ் கைதிகளையும் 3 நாட்கள் சிபிஐ காவலில் எடுத்து விசாரணை நடத்திய நிலையில் கொலை வழக்கில் இரண்டாம் கட்டமாக கைது செய்யப்பட்ட 3 போலிஸ் கைதிகளான செல்லதுரை, சாமத்துரை, வெயில்முத்து ஆகியோரை 23ஆம் தேதி வரை சிபிஐ காவலில் விசாரிக்க மதுரை மாவட்ட தலைமை நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

இந்த நிலையில், 3 காவலர்களையும் நேற்று சாத்தான்குளம் காவல் நிலையம், பென்னிக்ஸ் கடை அமைந்திருந்த பகுதி ஆகிய பகுதிகளுக்கு நேரில் அழைத்து சென்ற சிபிஐ காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் இரவில் ஒமதுரை சிபிஐ அலுவலகத்திற்கு 3 பேரையும் அழைத்துவந்த நிலையில் சிபிஐ குழுவில் இடம் பெற்றிருந்த இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் இன்று காலை வாக்குமூலங்களை ஆவணப்படுத்தும் பணிகள் நடைபெற்றதை தொடர்ந்து 3 பேரையும் மதுரை மாவட்ட தலைமை நீதிமன்ற நீதிபதி ஹேமானந்தகுமார் முன்னிலையில் ஆஜர் படுத்தபட்டதை அடுத்து 3 காவலர்களுக்கும் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இதனை அடுத்து 3 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப் பட்டனர்

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

ஏற்கனவே, 3 காவலர்களையும் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கிய நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக ஒரு நாளுக்கு முன்பாகவே ஆஜர்படுத்தபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது!

இதனிடையே நேற்றைய தினம் சாத்தான்குளத்திற்கு 3பேரையும் அழைத்து சென்றபோது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மதுரை மாநகர ஆயுதப்படை காவலர் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பிற்கு சென்ற காவலர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், சிபிஐ விசாரணையின்போது ஆஜரான காவலர்களுக்கும், பென்னிக்ஸ் குடும்பத்தினர், சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றக் கூடிய காவலர்கள் உள்ளிட்ட சிபிஐ அதிகாரிகளோடு தொடர்பில் இருந்த பரிசோதனை நடத்தவாய்ப்பு உள்ளது.

இதனை அடுத்து வழக்கு தொடர்பாக சிபிஐ காவல்துறையினரின் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கு காலதாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

  • ரவிசந்திரன், மதுரை

Related articles

Recent articles

spot_img