நீட்டை எதிர்த்து ரோட்டை மறித்த நுங்கம்பாக்கம் பள்ளி மாணவிகள்!

சென்னை நுங்கம்பாக்கத்தில் நீட் தேர்வை எதிர்த்து பள்ளி மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீட்’ தேர்வை தடை செய்யக் கோரியும், மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும் சென்னை நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் செயல்படும் பள்ளி மாணவிகள் தீடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 25 மாணவிகள், சாலையில் அமர்ந்து கோஷமிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவி ஒருவர் இது குறித்து பேசியபோது, போலீஸ்காரங்களுக்காகவும் தானே நாங்க போராடுறோம். ஞாயப்படி போலீஸ்காரங்களுக்கும் நீட் எக்ஸாம் வெக்கணும். நீட் எக்ஸாம்லாம் எழுந்திருந்தா போலீஸ்காரங்க இப்டி வேலைக்கு வந்திருப்பாங்களா?
நாங்க சொல்றத புரிஞ்சிக்க மாட்டேன்றாங்க எங்க டீச்சர்ஸ். அவங்களும் நீட் எக்ஸாம் எழுதினா தெரியும்” என்று ஆவேசமாகக் கூறினார்.

நுங்கம்பாக்கம் சூசைபுரம் சர்ச் அருகே அதனைச் சார்ந்த பள்ளியில் 7,8,9,10 ஆம் வகுப்புகளில் பயின்று வரும் மாணவியரின் போராட்டத்தால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள், வேண்டாம், வேண்டாம் நீட் தேர்வு வேண்டாம்; ஜல்லிக்கட்டுக்கு பீட்டா, அனிதா சாவுக்கு நீட்டா என்று முழக்கமிட்டவாறு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளுடன் ஆசிரியைகள், காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் கலைந்து போகச் செய்தனர்.  சென்னையில் மாணவிகள் சாலை மறியலால் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அனைத்து ஊடகத்தின் செய்திகளிலும்  இந்தப் போராட்டம் நேரலையாக ஒளிபரப்பானது.

ALSO READ:  எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories