செப்.6: தமிழகத்தில் இன்று… 5,783 பேருக்கு கொரோனா; 88 பேர் உயிரிழப்பு!

சற்றுமுன் சென்னை தமிழகம்
கொரோனா விவரம்
கொரோனா விவரம்

தமிழகத்தில் இன்று…  5,783 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதை அடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 63 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இன்று நோய்த் தொற்றுக்கு 88 பேர் உயிரிழந்துள்ளனர். 

தமிழகத்தில் இன்று 5783  பேருக்கு  நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதையடுத்து தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,63,480 ஆக அதிகரித்துள்ளது .

சென்னையில் ஒரே நாளில் 955 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. இதை அடுத்து, சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 141654 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் இன்று கொரானா தொற்று காரணமாக 28 பேர் உயிரிழந்துள்ளனர் இதை அடுத்து கொரோனா நோய்த் தொற்று தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,836 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து 5,820 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். இதை அடுத்து, கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு, வீடுகளுக்குத் திரும்பியோர் எண்ணிக்கை 4,04,186 என அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது 

சென்னையை அடுத்து அதிகபட்சமாக, கோவையில் 538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. சென்னையை அடுத்துள்ள மாவட்டங்களான செங்கல்பட்டில் 361 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 196 பேருக்கும் திருவள்ளூரில் 246 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரம்

districtwise-corona-affected-cases-sep-06
districtwise-corona-affected-cases-sep-06

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.